என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலோபதி"

    • ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம்
    • இதற்கு மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளித்து, அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்ற மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் ஜூன் 30 அன்று வெளியிட்ட அறிவிப்பில் ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவத்தில் பயிற்சி பெறுவதற்காக நவீன மருந்தியலில் சான்றிதழ் படிப்பை (CCMP) படிக்க மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .

    அதாவது ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மகாராஷ்டிர அரசியல் தலைவர்கள், பல ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள், அவர்களின் அழுத்தத்தால் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் சந்தோஷ் தெரிவித்தார்.

    • நேற்று (சனிக்கிழமை) உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது.
    • கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் (ILBS) ஏற்பாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    நேற்று (சனிக்கிழமை) உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு டெல்லியில் கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் (ILBS) ஏற்பாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    2020 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்ததாகவும், இப்போது அலோபதி மருந்துகள் மற்றும் இன்சுலினை கிட்டத்தட்ட முற்றிலும் விட்டுவிட்டதாகவும் கூறினார்.

    60 வயதான அவர், அனைவரும் ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

    • ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர்.
    • இஸ்லாம் மதத்தின் பெயரில் கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் . அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர்

    அலோபதி மருந்துகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கய பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனதின் மீது கடந்த 2 வருடங்களாக மேலாக வழக்கு நடந்துவந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் 3 முறை ஆஜராகி மன்னிப்பு கேட்டுள்ளார்.

    மேலும் பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சிறிய அளவிலான விளம்பரங்கள் மூலம் மன்னிப்பு கோரியிருந்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிபதிகள் அதிருப்தியில் இருந்தனர். எனினும் இனி தவறு செய்ய மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் மன்றாடிய நிலையில் அந்த உத்தரவாதத்தை ஏற்று கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

    இந்த நிலையில்தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அலோபதி மருந்துகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ். நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பேசிய பாபா, பிணிநீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எனவே அலோபதி மருந்துகளால்  கோடிக்கணக்கான மக்கள் வருடந்தோறும் இறந்து கொண்டிருக்கின்றனர்.

    நமக்குத் தெரிந்த வரலாற்றின்படி உலகை அடக்கி ஆள்வதற்காக ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர். அதே சமயம், இஸ்லாம் மதத்தின் பெயரில் மில்லியன் கணக்கானவர்கள் கொன்று  குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

    ×