என் மலர்
நீங்கள் தேடியது "Lenin"
இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில், லெனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட் லேபிள். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்டு இப்படத்திற்கு பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.
இப்படத்திற்கு, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளனர். கவுரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரெட் லேபிள் வரும் 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சென்னை பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனாக நடித்துள்ள லெனின் பேசியதாவது:-
முதலில் 2023-ல் கதை தேர்வானது, கதை பிடித்துவிட்டது. ஆனால் எந்தப் படம் வந்தாலும் நமது படத்தில் உள்ள காட்சிகள் இருப்பதுபோல் தோன்றியது. அதனால் போன ஆண்டில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன்.
வாரம் எட்டு படம் வருகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் நினைத்தது வந்தது போலவே தோன்றும். இருந்தாலும் கதை வலுவாக இருந்ததால் தைரியமாக இருந்தோம்.
நான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன். ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்து தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தினேன்.
இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்றார்கள்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நாம் முதல் போட்டு படம் எடுக்கிறோம். அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும்.
இப்படி 2023 இல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருந்தன. இருந்தாலும் இயக்குநரும் மற்றவர்களும் இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம்.
இது எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.
சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது .
இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம். ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர்.
- இஸ்லாம் மதத்தின் பெயரில் கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் . அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர்
அலோபதி மருந்துகள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கய பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனதின் மீது கடந்த 2 வருடங்களாக மேலாக வழக்கு நடந்துவந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் 3 முறை ஆஜராகி மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சிறிய அளவிலான விளம்பரங்கள் மூலம் மன்னிப்பு கோரியிருந்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிபதிகள் அதிருப்தியில் இருந்தனர். எனினும் இனி தவறு செய்ய மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் மன்றாடிய நிலையில் அந்த உத்தரவாதத்தை ஏற்று கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.
இந்த நிலையில்தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அலோபதி மருந்துகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ். நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பேசிய பாபா, பிணிநீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எனவே அலோபதி மருந்துகளால் கோடிக்கணக்கான மக்கள் வருடந்தோறும் இறந்து கொண்டிருக்கின்றனர்.
நமக்குத் தெரிந்த வரலாற்றின்படி உலகை அடக்கி ஆள்வதற்காக ஆங்கிலேயர்கள் 10 கோடி மக்களை அலோபதி மருந்துகள் மூலம் கொலை செய்துள்ளனர். அதே சமயம், இஸ்லாம் மதத்தின் பெயரில் மில்லியன் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, லெனின், கார்ல் மார்க்ஸ், மாவோ ஆகியோர் ஏற்படுத்திய புரட்சியால் பலர் கொலை செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.






