என் மலர்
நீங்கள் தேடியது "Patanjali"
- ஆயுர்வேதம் என்றால் அது சரியானது.
- ஆயுர்வேதம் பாதுகாப்பானது.
சென்னை :
ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சிக்குழு உடல் எடையைக் குறைப்பதற்காக 'திவ்யா வெயிட் கோ' என்ற பெயரில் ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சிக்குழு அறிவியலில் சிறந்து விளங்கி வருகிறது என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. இந்தக்குழு தயாரித்துள்ள புதிய ஆயுர்வேத மருந்தான 'திவ்யா வெயிட் கோ' எந்தவிதமான எதிர்மறையான பக்கவிளைவுகளும் இல்லாதது.
விரிவான உடல் செயல்முறைகள் இல்லாமல் கூட கொழுப்பைக் குறைத்து குளுக்கோஸ், இன்சுலின் சுரப்பு பாதிப்பு இன்றி உடல் எடையைக்குறைக்க முடியும். இதன் விரிவான ஆய்வு முடிவுகள் 'பயோமெடிசின் மற்றும் பார்மகோதெரபி' என்கிற புகழ் பெற்ற சர்வதேச இதழில் கூட வெளியிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் என்றால் அது சரியானது. அதனால் எல்லாம் சாத்தியம் ஆகும். ஆயுர்வேதம் பாதுகாப்பானது. அமிர்தம் போன்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம் தேவ் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதஞ்சலி ஆய்வுக்கூடத்தில் ஆயுர்வேத பொருட்களுடன், வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறார்.
நாடு முழுவதும் பதஞ்சலி பொருட்களை நேரடியாகவும், டீலர்கள் மூலமும் விற்பனை செய்து வருகிறார். மற்ற சர்வதேச கம்பெனிகளுடன் போட்டி போடும் அளவுக்கு பதஞ்சலி பொருட்கள் சந்தையில் பேசப்பட்டு வருகிறது.
அடுத்து அன்றாடம் உபயோகப்படுத்தும் பால் பொருட்கள் விற்பனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே பசு நெய்யை பதஞ்சலி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து பசும்பால், தயிர், வெண்ணெய், பால் பிஸ்கட், பால் நூடுல்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி ராம்தேவ் கூறுகையில், ‘‘பதஞ்சலி நிறுவனம் முதலில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பசும்பால் விற்பனை செய்யும். தொடர்ந்து 10 லட்சம் லிட்டர் வரை பசும்பால் விற்பனை செய்யப்படும்’’ என்றார்.
2020-ம் ஆண்டில் ரூ.1000 கோடி அளவுக்கு பசும்பால் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக 1 லட்சம் விவசாயிகளுடன் இணைந்து இது செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பதஞ்சலி பாக்கெட் பால் லிட்டர் ரூ.40-க்கு கிடைக்கும். இதுமற்ற பால்களைவிட ரூ.2 குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #BabaRamdev #Patanjali

