search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IMA"

    • பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.

    தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பதஞ்சலி நிறுவனம் அலோபதி மருந்துகளுக்கு எதிராக விளம்பரங்களை வெளியிடுவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்ததுடன், பதஞ்சலி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • ஷஹானா திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
    • தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ் என்பவரின் மகள் ஷஹானா (வயது26). எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தான் தங்கியிருந்த குடியிருப்பில் கடந்த 4-ந்தேதி மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அவருடைய தற்கொலைக்கு அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் தான் காரணம் என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கேட்ட அதிக வரதட்சணையை தர முன்வராத காரணத்தால் திருமணம் செய்துகொள்ள ரூவைஸ் மறுத்திருக்கிறார். இதில் வேதனையடைந்த மாணவி ஷஹானா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ரூவைசை இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

    • திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி ஓட்டலில் வருகிற 16-ந் தேதி மாலை 5மணிக்கு நடக்கிறது.
    • மருத்துவர் தினத்தையொட்டி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    அவிநாசி :

    இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன்(ஐஎம்ஏ) அவிநாசி டெக்ஸ்சிட்டி கிளை தொடக்க விழா திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி ஓட்டலில் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5மணிக்கு நடக்கிறது.

    நிகழ்ச்சியில் ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி., தலைவர் செந்தமிழ் பாரி தலைமை தாங்குகிறார். ஐ.எம்.ஏ., அவினாசி டெக்ஸ்சிட்டி செயலாளர் கார்த்திகேயன் வரவேற்று பேசுகிறார். முதன்மை விருந்தினர்களாக செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், திருப்பூர் ஜே.டி.எம்.எஸ்., கனகராணி, ஐ.எம்.ஏ.,டி.என்.எஸ்.பி., செயலாளர் தியாகராஜன், பாஸ்ட் நேஷனல் ஐ.எம்.ஏ., தலைவர் ஜெயலால், துணை தலைவர் பிரகாசம், நேஷனல் ஐ.ஏம்.ஏ., துணை தலைவர் குணசேகரன், டாக்டர் அபுல் ஹாசன், என்.எச்.பி., சேர்மன் கார்த்திக் பிரபு, டாக்டர் கருணா ஆகிேயார் கலந்து கொள்கின்றனர். மேலும் டி.எம்.எப். ஆஸ்பத்திரி இயக்குனர் தங்கவேல், ஸ்ரீகுமரன் மருத்துவமனை சேர்மன் செந்தில்குமரன், டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐஎம்ஏ., அவினாசி டெக்ஸ்சிட்டி தலைவர் அஜாஸ் அன்சாரி, செயலாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, துணை தலைவர் ஹரி வீர விஜயகாந்த், இணை செயலாளர் நல்லசிவம், மத்திய கவுன்சில் உறுப்பினர் முகமது முபாரக் அலி, அட்வைசரி போர்டு டாக்டர்கள் ஜெயராமகிருஷ்ணன், ரமணி, ராஜ்குமார், சரவணன், பிரகாஷ் ஆகியோர் செய்துள்ளனர். முடிவில் ஸ்டேட் கவுன்சில் உறுப்பினர் பொம்முசாமி நன்றி கூறுகிறார். நிகழ்ச்சியில் மருத்துவர் தினத்தையொட்டி விருதுகள் வழங்கப்பட உள்ளது. 

    ×