என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலப்பட நெய்"

    • தேசிய ஆய்வகமும் நெய் தரமற்றது என்று உறுதிப்படுத்தியது. மேலும், நெய்யில் கலப்படம் இருந்ததும் பரிசோதனையில் அம்பலமானது.
    • உணவு பாதுகாப்பு அதிகாரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்காட்டுள்ளது.

    இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரித்த நெய்யின் மாதிரி, தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, அந்த நிறுவனத்திற்கு உத்தரகாண்ட் மாநில நீதிமன்றம் ரூ. 1.40 லட்சம் அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

    இந்த வழக்கு அக்டோபர் 2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. உணவு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி திலீப் ஜெயின், வழக்கமான பரிசோதனையின்போது பித்தோராகரில் உள்ள ஒரு கடையில் பதான்ஜலி நெய்யின் மாதிரியைச் சேகரித்தார்.

    முதலில், ருத்ரபூரில் உள்ள அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், நெய்யின் மாதிரி நிர்ணயிக்கப்பட்ட தரத்தை எட்டவில்லை என்றும், கலப்படப் பொருட்கள் இருந்ததாகவும் தெரியவந்தது. ஆரம்ப சோதனை முடிவுகளை பதன்ஜலி எதிர்த்து.

    எனவே நெய்யின் மாதிரி பரிசோதனைக்காக காஜியாபாத்தில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தேசிய ஆய்வகமும் நெய் தரமற்றது என்று உறுதிப்படுத்தியது. மேலும், நெய்யில் கலப்படம் இருந்ததும் பரிசோதனையில் அம்பலமானது.

    இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரி பித்தோராகர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    அனைத்து வாதங்களையும், ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் நெய்யின் உற்பத்தியாளரான பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட்டுக்கு ரூ. 1 லட்சம், விநியோகஸ்தருக்கு ரூ. 25 ஆயிரம், அந்த நெய்யை விற்ற கடைக்காரருக்கு ரூ. 15 ஆயிரம் என மொத்தம் ரூ. 1.40 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனால் நுகர்வோர் மத்தியில் பொருளின் தரம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது.      

    • கர்நாடகா அரசால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்

    கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்னிந்தியாவின் மதிப்புமிக்க பால் பொருட்களின் பிராண்டாக மாறியுள்ள நந்தினி பெயரில் கலப்பட நெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில், சாமராஜ்பேட்டை நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற கிடங்கில் போலீஸ் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் மகேந்திரா மற்றும் மகன் தீபக், முனிராஜு, மற்றும் அபிஅரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி ரொக்கமும், ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 4 சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கலப்பட நெய் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக, கர்நாடக போலீசார் தமிழ்நாட்டு போலீசுடன் இணைந்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் உள்ள ஆலையில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஆனது.
    • ஏ.ஆர்.டெய்ரி என்ற பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்றது.

    சமீபத்தில் ஆந்திராவின் திருப்பதி திருமலை கோவிலின் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஆனது.

    இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நெய்க்கு பதில் ரசாயனம் கலந்த பாமாயிலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த போலே பாபா நிறுவனம் வழங்கியது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தேவஸ்தானத்தில் போலே பாபா டெய்ரி நிறுவனம் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளதால் நேரடியாக ஒப்பந்தம் பெற முடியாமல் ஏ.ஆர்.டெய்ரி என்ற பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்று விநியோகித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான குற்றச்சாட்டில் சிபிஐ தொடர்புடையவர்களைக் கைது செய்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழங்க சிபிஐ நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  

    • நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார்.

    திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் வழங்கும் நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் நிறுவனம் 8.50 லட்சம் கிலோ நெய் வழங்க ஒப்பந்தம் பெற்று இருந்தது. இதுவரை 68 ஆயிரம் கிலோ நெய் வழங்கி உள்ளது.

    அதில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றது என திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. தரமற்ற நெய்யை வினியோகம் செய்த திண்டுக்கல் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
    • நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பதற்காக நெய் வழங்க 5 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளது. லட்டு தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்த நெய் தரம், மணம், சுவையில் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தரமான நெய்யை கொள்முதல் செய்ய 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

    இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு தடை விதித்த தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.

    • கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
    • 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருப்பதி லட்டில் கலப்பட நெய் சேர்க்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜோய்ஸ், மேன்மா, எஸ்.ஆர்.எஸ். ஆகிய நிறுவனத்தினர் நெய்யுடன் தாவர எண்ணெய், வனஸ்பதி ஆகியவை சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து இந்த 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரூ.7 லட்சம் மதிப்புடைய 5,500 கிலோ நெய்யை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

    இந்தூர்:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட கலப்பட நெய்யை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலப்பட நெய் உற்பத்தியை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள ஒரு நிறுவனம் கலப்பட நெய்யை உற்பத்தி செய்துவருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த நிறுவனத்தில் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் பிற சமையல் எண்ணெய்களை கலந்து தரமற்ற நெய் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.7 லட்சம் மதிப்புடைய 5,500 கிலோ நெய்யை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். பின்னர் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.

    • மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்று கேள்வி.
    • ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவு.

    திருப்பதி திருமனை தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் நெய் வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

    கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை என்றும் ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டாமா ? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலம், மத்திய உணவுப் பாதுகாப்பு துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

    சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் எங்கே ? ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்க உத்தரவிட்டு, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    ×