என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai highcourt"

    • ஹேமந்த் சந்தன்கவுடரை கர்நாடகாவில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை.
    • ஹேமந்த் சந்தன்கவுடரை கர்நாடகாவில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை.

    உச்சநீதிமன்றம் கொலிஜியம் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளை மற்ற மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளது. தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளது.

    1. ஹேமந்த் சந்தன்கவுடரை கர்நாடகாவில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை

    2. கிருஷ்ணன் நடராஜன் கர்நாடகாவில் இருந்து கேரளா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை

    3. நெரனஹல்லி ஸ்ரீனிவாசன் சஞ்சய் கவுடா கர்நாடகாவிலா் இருந்து குஜராத் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை

    4. பெருகு ஸ்ரீ சுதா தெலுங்கானா நீதிமன்றத்தில் இருந்து கர்நாடகா நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்தரை

    5. ககோஜு சுரேந்தனர் என்ற கே. சுரேந்தர் தெலுங்கானாவில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்ற பரிந்துரை

    6. டாக்டர் கும்பஜடாலா மன்மத ராவ் ஆந்திராவில் இருந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை

    7. தீக்சிட் கிருஷணா ஸ்ரீபாட் கர்நாடகாவில் இருந்து ஒடிசா உயர்நீதிமன்றத்திற்க மாற்ற பரிந்துரை.

    • தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு.
    • தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு அளித்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இதனால் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • கல்லூரி மாணவர்கள் மோதலில் மாணவன் பலியானது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    • குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கருத்து.

    கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

    பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதலில் மாணவன் பலியானது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    பல தலைவர்கள் படித்த புகழ்பெற்ற கல்லூரிகளில் குற்ற நடவடிக்கைகள் நடப்பது வேதனை அளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

    மேலும், குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

    • தவெக கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது.
    • பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பு வழக்கு தொடர்ந்தார்.

    தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பு தொடர்ந்த வழக்கில்," தவெக கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தவெக கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இதுதொடர்பாக ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.

    இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    தொடர்ந்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

    மேலும், அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?

    அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என டிஜபி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    மேலும், மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இது தொடர்பாக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

    அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. புகார் இல்லாமலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அமைச்சர் பொன்முடி மீதான ஒரு புகார் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நான்கைந்து வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்துப் போய்விடும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நீதிபதி வழக்கின் விசாரணையை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த வழக்கில் சதீஷ்குமார் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் ந்த ரசாயனமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியு்ள்ளது.
    • வீடியோ ஆதாரங்களை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவிப்பு.

    நீதித்துறையை அவமிதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    வழக்கு விசாரணையின்போது, சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த 20 ஆண்டுகளாக சீமான் பேச்சை கேட்கவில்லையா ? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா ? என்று சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் வீடியோ ஆதாரங்களை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு.
    • ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒழுங்குப்படுத்துவது அரசின் பொறுப்பும் கூட.

    ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருமாறு:-

    * ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு.

    * ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒழுங்குப்படுத்துவது அரசின் பொறுப்பும் கூட.

    * விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

    * கேண்டி கிரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளோடு ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு.

    இவ்வாறு தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    • மக்களவை தேர்தலின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக வழக்கு.
    • ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீட்டித்துள்ளது.

    மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு போடப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    • தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்ப விசாரணையை நடத்தி முடிப்பதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.
    • சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

    அதிமுக சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் "அதிமுக சின்னம் மற்றும் உட்கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்ப விசாரணையை நடத்தி முடிப்பதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.
    • கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு.

    2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    ராமமூர்த்தி என்பவர் 2021-ம் அண்டு இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்திருந்தார்.
    • வானூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள அனுமதி.

    காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சினார்.

    இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.

    குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மனு குறித்து பதில் அளிக்க மும்பை கர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×