கதை திருட்டு புகாரில் சிக்கிய "பராசக்தி"- திட்டமிட்டபடி வெளியாகுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘பராசக்தி’.
கதை திருட்டு புகாரில் சிக்கிய "பராசக்தி"- திட்டமிட்டபடி வெளியாகுமா?
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து வரும் ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் 'பராசக்தி' திரைப்படம் குறிப்பிட்ட நாளில் திரையரங்குகளில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com