என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடிக்கம்பங்களை அகற்றக் கோரிய வழக்கு: அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி
    X

    கொடிக்கம்பங்களை அகற்றக் கோரிய வழக்கு: அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

    • சாலைகளில் செண்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
    • சென்னை அண்ணா மேம்பாலத்தில் தி.மு.க. கொடிகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் என்னிடம் இருக்கிறது.

    தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி இடங்களில் அனுமதியின்றி உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளது.

    சாலைகளில் செண்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என நீதிபதி இளந்திரையன் அதிருப்தி தெரிவித்தார்.

    மேலும், சென்னை அண்ணா மேம்பாலத்தில் தி.மு.க. கொடிகள் அமைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் என்னிடம் இருக்கிறது என்றார்.

    அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில், "பொது இடங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம் அறிக்கை கோரியுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 3ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×