என் மலர்
இந்தியா

"அலோபதி மருந்துகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன்" - ஆரோக்கியமாக இருக்க அமித் ஷா பகிர்ந்த சீக்ரெட்
- நேற்று (சனிக்கிழமை) உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது.
- கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் (ILBS) ஏற்பாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நேற்று (சனிக்கிழமை) உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு டெல்லியில் கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம் (ILBS) ஏற்பாடு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
2020 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்ததாகவும், இப்போது அலோபதி மருந்துகள் மற்றும் இன்சுலினை கிட்டத்தட்ட முற்றிலும் விட்டுவிட்டதாகவும் கூறினார்.
60 வயதான அவர், அனைவரும் ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறு மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story






