என் மலர்
இந்தியா

ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் - பாஜக அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு
- ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம்
- இதற்கு மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளித்து, அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்ற மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் ஜூன் 30 அன்று வெளியிட்ட அறிவிப்பில் ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவத்தில் பயிற்சி பெறுவதற்காக நவீன மருந்தியலில் சான்றிதழ் படிப்பை (CCMP) படிக்க மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
அதாவது ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகாராஷ்டிர அரசியல் தலைவர்கள், பல ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள், அவர்களின் அழுத்தத்தால் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் சந்தோஷ் தெரிவித்தார்.






