search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian medical association"

    • 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும்.
    • விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்திய மருத்துவ சங்க(ஐ.எம்.ஏ.) அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, இந்திய மருத்துவ சங்க சி.ஜி.பி. பிரிவு மற்றும் ஏ.எம்.எஸ். பிரிவு தொடக்க விழா, டாக்டர்கள் தின கொண்டாட்டம் ஆகிய ஐம்பெரும் விழா திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி ஓட்டலில் நடந்தது. ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார். ஐ.எம்.ஏ.அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தலைவர் டாக்டர் மோகன சுந்தரி வரவேற்புரையாற்றி தனது பொறுப்பை புதிய தலைவர் டாக்டர் அஜாஸ் பி.அன்சாரியிடம் ஒப்படைத்தார்.

    டாக்டர் அஜாஸ் பி.அன்சாரி அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன், பொருளாளர் டாக்டர் கே.சுந்தரமூர்த்தி, துணை தலைவர் டாக்டர் பி.ஹரிவீர விஜயகாந்த், இணை செயலாளர் டாக்டர் பி.நல்லசிவம், மத்திய கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முமகது முபாரக் அலி, மாநில கவுன்சில் உறுப்பினர் டாக்டர் கே.பொம்முசாமி, ஆலோசனை குழு உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், டாக்டர் யு.ரமணி, டாக்டர் என்.ராஜ்குமார், டாக்டர் எஸ்.சரவணன், டாக்டர் ஆர்.பிரகாஷ் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.

    திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை சார்பில் அனைத்து மருத்துவ சேவை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள கணியாம்பூண்டி கிராமத்தை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோல் 21 டாக்டர்களுக்கு 'பில்லர்ஸ் ஆப் டெக்ஸ்சிட்டி' என்ற விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி வழங்கி பேசியதாவது, பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும். இதற்காக இதுவரை 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகரஜன், தேசிய ஐ.எம்.ஏ. முன்னாள் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், துணை தலைவர் டாக்டர் ஆர்.குணசேகரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தேர்வு தலைவர் டாக்டர் அபுல் ஹசன், மேற்கு மண்டல துணை தலைவர் டாக்டர் கருணா, முன்னாள் துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, டி.எம்.எப். டாக்டர் தங்கவேல், ஸ்ரீ குமரன் மருத்துவமனை டாக்டர் செந்தில் குமரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. டாக்டர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.

    • தூத்துக்குடி மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர்.
    • விழாவுக்கு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார் .

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக டாக்டர். எஸ். மாரிமுத்து, செயலாளராக டாக்டர். எஸ். சிவசைலம், பொருளாளராக டாக்டர். ஆர்த்தி கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

    விழாவுக்கு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார் . முன்னாள் தலைவர் எஸ். அருள்ராஜ், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை தலைவர் அபுல்கசன், துணைத்தலைவர் திரவியம் மோகன், செயலாளர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், பொருளாளர் அழக வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் தூத்துக்குடி இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் 250 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளது. இதில் 2 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அந்த டாக்டர்கள் அனைவரும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால், அவசர சிகிச்சை, ஆபரே‌ஷன் போன்ற பணிகள் ஆஸ்பத்திரிகளில் நடந்து வருகிறது.

    டாக்டர்களின் இந்த போராட்டத்தால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்திய மருத்துவ அசோசியே‌ஷன் சார்பில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயசித்ரா மற்றும் டாக்டர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு கொடுத்தனர். #DoctorsStrike

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 1500 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #IndianMedicalAssociation #DoctorsStrike
    திருச்சி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மருத்துவ ஆணையத்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் 44 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதில் 32 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் 250 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன.

    இதில் பணியாற்றும் 1500 டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணியாற்றவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை. இதனால் பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து முன்னாள் மாநில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் குணசேகரன், மாநில துணைத் தலைவர் சேதுராமன் ஆகியோர் கூறியதாவது :-

    மருத்துவ உலகின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தம் செய்கிறோம். இந்த சட்டத்தை கொண்டு வந்தால் இந்த ஆணையத்தில் உள்ள 25 உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். மற்றவர்கள் நியமனம் பெற்றவர்கள் ஆவர்.

    அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்காது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத நிர்வாக ஒதுக்கீடு 50 சதவீதமாக உயரும். அதற்கான கட்டணத்தை தனியார் மருத்துவ கல்லூரியே நியமிப்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    மாற்றுமுறை மருத்துவர்கள் இணைப்பு பயிற்சி என்ற பெயரில் அலோபதி மருத்துவம் பார்க்க அனுமதிப்பது மருத்துவ சமுதாயத்திற்கு எதிரானது. எனவே தான் இந்த ஆணையத்தை கைவிட வலியுறுத்துகிறோம்.

    மத்திய அரசு கைவிடவில்லை என்றால் எங்கள் போராட்டம் தீவிரமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.   #IndianMedicalAssociation #DoctorsStrike
    தமிழகம் முழுவதும் நாளை 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் 12 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. #IndianMedicalAssociation
    நாகர்கோவில்:

    மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இது தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் ஜெயலால் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணையம் ஜனநாயக மரபிற்கு எதிரானது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் எல்லா மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்காது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே இச்சட்டத்தை கைவிடக்கோரி இந்திய மருத்துவர் சங்கம் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    அதன்படி, நாளை (28-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணிநேர வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    தமிழகத்தில் 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும். 34 ஆயிரம் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நாளை நடைபெறும் போராட்டத்தின் போது உள்நோயாளிகளை தவிர புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது.

    அவசர கால சிகிச்சை, பிரசவம் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு மட்டும் செயல்படும். அவசரமில்லாத ஆபரேசன்கள் நடைபெறாது. நாளை காலை 9 மணிக்கு இந்திய மருத்துவர் சங்க கிளைகளின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IndianMedicalAssociation
    ×