search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் 12 மணி நேர வேலை நிறுத்தம்
    X

    நாளை 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் 12 மணி நேர வேலை நிறுத்தம்

    தமிழகம் முழுவதும் நாளை 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் 12 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. #IndianMedicalAssociation
    நாகர்கோவில்:

    மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இது தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் ஜெயலால் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணையம் ஜனநாயக மரபிற்கு எதிரானது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் எல்லா மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்காது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே இச்சட்டத்தை கைவிடக்கோரி இந்திய மருத்துவர் சங்கம் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    அதன்படி, நாளை (28-ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணிநேர வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    தமிழகத்தில் 4,500 தனியார் ஆஸ்பத்திரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும். 34 ஆயிரம் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். நாளை நடைபெறும் போராட்டத்தின் போது உள்நோயாளிகளை தவிர புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது.

    அவசர கால சிகிச்சை, பிரசவம் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு மட்டும் செயல்படும். அவசரமில்லாத ஆபரேசன்கள் நடைபெறாது. நாளை காலை 9 மணிக்கு இந்திய மருத்துவர் சங்க கிளைகளின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IndianMedicalAssociation
    Next Story
    ×