தூத்துக்குடி மாநகர இந்திய மருத்துவ சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடி மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர்.விழாவுக்கு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார் .
நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்
நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர இந்திய மருத்துவ சங்கத்தில் சுமார் 500 மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக டாக்டர். எஸ். மாரிமுத்து, செயலாளராக டாக்டர். எஸ். சிவசைலம், பொருளாளராக டாக்டர். ஆர்த்தி கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

விழாவுக்கு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார் . முன்னாள் தலைவர் எஸ். அருள்ராஜ், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை தலைவர் அபுல்கசன், துணைத்தலைவர் திரவியம் மோகன், செயலாளர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், பொருளாளர் அழக வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் தூத்துக்குடி இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com