search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் நாளை, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தஞ்சையில் நாளை, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம்- கலெக்டர் தகவல்

    • அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.
    • அடையாள அட்டை பெறாத மாற்றுதிறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியில் படிக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ சான்று வழங்குவதற்கு வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட மாற்று திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர் நகரத்தை சேர்ந்தவர்களுக்கு தஞ்சாவூர் மேம்பாலம் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (வியாழக்கிழமை ) இந்த முகாம் நடைபெற உள்ளது.

    இதேபோல் ஒரத்தநாடு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 21-ந் தேதி கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ் உலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. கும்பகோணம் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு வரும் 24-ந் தேதி புனித தூய நடுநிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 28-ந் தேதி பள்ளத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தஞ்சாவூர் ஊரகத்தை சேர்ந்தவர்களுக்கு வரும் 31-ந் தேதி வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திருவிடைமருதூர் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

    திருவையாறு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி திருவையாறு சீனிவாசராகவ மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பனந்தாளை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 4-ந் தேதி எஸ்.கே.ஜி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பூதலூரை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியிலும், பேராவூரணியை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

    பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடுத்த மாதம் 11-ந் தேதியும், அம்மாபேட்டையை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 14-ந் தேதி ரெஜினா சேலி மேல்நிலைப் பள்ளியிலும், திருவோணம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 16-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மதுக்கூரை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 18-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளும் நடைபெறுகிறது.

    இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுதிறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்று திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை , ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×