என் மலர்

  நீங்கள் தேடியது "ramanathapuram collector"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் கூறி உள்ளார்.
  • வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

  இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.

  உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய உபகரணங்கள் பொது மக்களின் சேவைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.

  24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை வழங்க டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

  மருத்துவமனையில் பாம்பு கடி மற்றும் அவசர கால சிகிச்சைக்கான மருந்துகளின் இருப்பு குறித்தும், விபத்து மற்றும் அவசர கால பிரிவையும் பார்வையிட்டார். வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை மூலம் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறன் ஏழை பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்க தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்குள் தாசில்தாரிடம் பெறப்பட்ட வருமானச் சான்று, இருப்பிடச் சான்று தாசில்தாரிடம் பெற வேண்டும்.

  அல்லது ரே‌ஷன்கார்டு, பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 6 மாத கால தையல் பயிற்சி சான்று, வயது சான்று (20 முதல் 40 வரை) அல்லது கல்வி சான்று அல்லது பிறப்பு சான்று, சாதிச்சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத்திறன் பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் பாஸ்போர்ட் சைஸ் விண்ணப்பதாரரின் கலர் போட்டோ ஆகிய சான்றுகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரத்தில் கலெக்டர் பங்களா நுழைவு வாயில் முன்புள்ள அறையில் பாதுகாப்பு பணியின் போது தூங்கிய போலீஸ்காரர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #TNPolice
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகே கலெக்டர் பங்களா உள்ளது. இங்கு தற்போதைய கலெக்டர் வீரராகவராவ் வசித்து வருகிறார். ஆயுதப்படை போலீசார் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கடந்த சில நாட்களாக ராஜாமுகமது என்ற ஆயுதப்படை போலீஸ்காரருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் நேற்று கலெக்டர் வீட்டின் நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

  அப்போது நுழைவு வாயில் முன்புள்ள அறையில் ராஜா முகமது பணி செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்தார். இது குறித்த தகவல் கலெக்டர் வீரராகவராவுக்கு தெரிய வந்தது.

  அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போதும் ராஜா முகமது தூங்கிக் கொண்டிருந்தார்.

  அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு ராஜா முகமதுவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

  இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், பணியின்போது தூங்கிய போலீஸ்காரரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ அறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNPolice
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் கஜா புயல் பாதிப்புக்கு ரூ.76 லட்சம் நிவாரணம் வழங்கியதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். #GajaCyclone
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

  கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் மூலமாக சேகரிக்கப்பட்ட ரூ.31,60,500 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திருவாரூர், நாகை பகுதிகளுக்கு 3 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடங்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மையத்தின் மூலம், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் இதுவரை மொத்தம் ரூ.72,06,010 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  இது தவிர தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை மொத்தம் ரூ.3,02,900 மதிப்பிலான காசோலை பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  மேலும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.

  அவை அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

  பேட்டியின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். #GajaCyclone
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சவுதி அரேபியாவில் உள்ள கணவரை மீட்டுத்தர வேண்டி ராமநாதபுரம் கலெக்டரிடம் பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன் (வயது 40). இவரது மனைவி அனுசியா. தனது 2 மகள்களுடன், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு மனு கொடுத்தார்.

  அதில் ‘‘எனது கணவர் கடந்த பத்து ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஊருக்கு வந்து சென்றார். கடந்த இரண்டு மாதங்களாக அவரிடம் எந்த விதமான தொடர்பும் இல்லை.

  அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவருக்கும் வேலை பார்க்கும் அல்தப்ரி கார் வாஷ் நிறுவனத்தின் உரிமையாளருக்கும் ஏதோ பிரச்சனை என போனில் கூறினார். அதன் பின்னர் இன்று வரை எந்தவித தொடர்பும் இல்லாமல் உள்ளது. நிறுவனத்தின் உரிமையாளருக்கும் போன் செய்தோம். தகவல்கள் ஏதும் சொல்லவில்லை. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

  கணவரை நம்பித்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொதுமக்களிடம் ஜாதி, மத ரீதியான பகைமை உணர்வை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:-

  ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8.9.2018-ம் தேதி முதல் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை பேணும் பொருட்டும், இரு பிரிவு சமூகத்தைச் சேர்ந்தவர்களும், அவரவர் நிகழ்ச்சிகளை எந்தவித சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் நடத்தவும் மாவட்டம் முழுவதும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

  சமீபகாலமாக, 14.10.2018-ம் தேதியன்று முதுகுளத்தூர் மற்றும் பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த சில நபர்கள், குறிப்பாக இளைஞர்கள் பிற சமுதாய மக்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியும், சமூக வலைதளங்களில் காணொளி செய்தியாக வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

  இது தொடர்பாக, முதுகுளத்தூர் மற்றும் பார்த்திபனூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத பதிவுகளை வெளியிட்ட நபர்கள் சட்டப்படி கைது செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

  சில வி‌ஷமிகள் செய்யும் தேவையற்ற, சட்டத்திற்கு புறம்பான செயல்களினால் அமைதியாக வசித்து வரும் பல்வேறு சமுதாய மக்களிடையே பிரச்சினை ஏற்பட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், சட்டம் ஒழுங்கும் பாதிப்படையும் வாய்ப்புள்ளது.

  இதுபோன்று வரும் வதந்திகளை குறுஞ்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

  மேலும் தவறாக அனுப்பும் குறுஞ்செய்திகளை யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் குழு தலைவர் அந்த செய்திகளையும் அந்த நபரையும் குழுவில் இருந்து நீக்கம் செய்வதுடன் அதுபற்றி காவல் துறைக்கு புகார் செய்ய வேண்டும்.

  இவ்வாறு தவறும் பட்சத்தில் குறுஞ்செய்திகளை பகிர்பவர்கள் மீதும், அந்த குழு தலைவர் மீதும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கருதப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

  பொதுமக்களிடம் ஜாதி, மத ரீதியான பகைமை உணர்வை தூண்டுவது, பல்வேறு சமுதாய மக்களிடம் நிலவி வரும் ஒற்றுமை மற்றும் பொது அமைதியை சீர்குலைப்பது, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போல் உணர்வை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

  மேற்கண்டவாறு அந்த எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
  ×