search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத உணர்வை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை- ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை
    X

    மத உணர்வை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை- ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை

    பொதுமக்களிடம் ஜாதி, மத ரீதியான பகைமை உணர்வை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8.9.2018-ம் தேதி முதல் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை பேணும் பொருட்டும், இரு பிரிவு சமூகத்தைச் சேர்ந்தவர்களும், அவரவர் நிகழ்ச்சிகளை எந்தவித சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் நடத்தவும் மாவட்டம் முழுவதும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    சமீபகாலமாக, 14.10.2018-ம் தேதியன்று முதுகுளத்தூர் மற்றும் பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த சில நபர்கள், குறிப்பாக இளைஞர்கள் பிற சமுதாய மக்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியும், சமூக வலைதளங்களில் காணொளி செய்தியாக வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக, முதுகுளத்தூர் மற்றும் பார்த்திபனூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத பதிவுகளை வெளியிட்ட நபர்கள் சட்டப்படி கைது செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சில வி‌ஷமிகள் செய்யும் தேவையற்ற, சட்டத்திற்கு புறம்பான செயல்களினால் அமைதியாக வசித்து வரும் பல்வேறு சமுதாய மக்களிடையே பிரச்சினை ஏற்பட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், சட்டம் ஒழுங்கும் பாதிப்படையும் வாய்ப்புள்ளது.

    இதுபோன்று வரும் வதந்திகளை குறுஞ்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

    மேலும் தவறாக அனுப்பும் குறுஞ்செய்திகளை யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் குழு தலைவர் அந்த செய்திகளையும் அந்த நபரையும் குழுவில் இருந்து நீக்கம் செய்வதுடன் அதுபற்றி காவல் துறைக்கு புகார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு தவறும் பட்சத்தில் குறுஞ்செய்திகளை பகிர்பவர்கள் மீதும், அந்த குழு தலைவர் மீதும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கருதப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

    பொதுமக்களிடம் ஜாதி, மத ரீதியான பகைமை உணர்வை தூண்டுவது, பல்வேறு சமுதாய மக்களிடம் நிலவி வரும் ஒற்றுமை மற்றும் பொது அமைதியை சீர்குலைப்பது, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போல் உணர்வை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அந்த எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×