search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாட்டி வதைக்கும் வெயில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - டாக்டர்கள் விளக்கம்
    X

    கோப்புபடம்.

    வாட்டி வதைக்கும் வெயில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - டாக்டர்கள் விளக்கம்

    • சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.
    • தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

    திருப்பூர் :

    வெய்யிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- அதிக வெப்ப காலங்களில் சிறுநீர்த் தொற்று உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் வெப்பத்தாக்கு நோய் வரலாம்.கோடைக் காலத்தில் வியர்வைச் சுரக்காதது, சுரந்தும் ஆவியாகாதது, 'ஹைபோதலமஸ்' சரியாக வேலை செய்யாமல் இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம்.நடுத்தர வயதினருக்கு சிறுநீரகப் பிரச்னைகளும், குழந்தைகளுக்கு தொண்டையில் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.வெப்பம் அதிகமுள்ள காலங்களில் அதிக வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.அதை தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற இயற்கை பானங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

    கோடைக்காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் பிரச்னைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவு, காய்கறி, பருப்பு வகைகள் நீர்ச்சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.குறிப்பாக, வழக்கமாக குடிக்கும் அளவை விட சற்று அதிகமாக நீர் அருந்த வேண்டும். சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்களால் கோடைக்காலங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படும்.எனவே பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. தலைக்கு தொப்பி அணிவது குடை பயன்படுத்துவது நல்லது.வயதானவர்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். குழந்தைகள் மதியவேளையில் விளையாடுவதை தவிர்த்து மாலையில் விளையாடலாம்.பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.ஐஸ் வாட்டர் குடிப்பது, உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×