என் மலர்
நீங்கள் தேடியது "டாக்டர்கள் கைது"
- சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
- போலீசார் 3 பயிற்சி டாக்டர்களை கைது செய்து விசாரித்தனர்.
சென்னை:
சென்னை போலீசில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், உளவுப்பிரிவு இணை கமிஷனர் தர்மராஜனின் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இந்த தனிப்படை போலீசாரும், கோட்டூர்புரம் போலீசாரும் இணைந்து உயர்ரக கிரீன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆங்கிலோ இந்தியரான சைதாப்பேட்டை சின்னமலை பகுதியைச் சேர்ந்த ரோட்னி ரொட்ரிகோ (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து1¼ கிலோ கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கு கிரீன் கஞ்சா விற்றதும், அந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் பயிற்சி டாக்டர்கள் தருண், ஜெயந்த், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய 3 பேர் தங்கியிருந்த அறையில் இருந்து கஞ்சா, வலி நிவாரணத்துக்காகவும், போதைக்காகவும் பயன்படுத்தப்படும் 4 கேட்டமைன் போதைப்பொருள் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீசார், 3 பயிற்சி டாக்டர்களையும் கைது செய்து விசாரித்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெறுகிறது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் கருணாநிதி நினைவிடத்தில் மவுன போராட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
- திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு ஆஸ்பத்திரி அருகில் இன்று டாக்டர் பெருமாள் பிள்ளை தலைமையில் டாக்டர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டனர்.
சென்னை:
அரசு டாக்டர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கி ஊதிய உயர்வை வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் கருணாநிதி நினைவிடத்தில் மவுன போராட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு ஆஸ்பத்திரி அருகில் இன்று டாக்டர் பெருமாள் பிள்ளை தலைமையில் டாக்டர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து மறித்து கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள பி.ஒய்.எல். நாயர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் பாயல் டாட்வி(26). பழங்குடியினத்தை சேர்ந்த இவரை சாதியின் பேரால் இங்கு உடன் பணியாற்றும் சில டாக்டர்கள் தொடர்ந்து அவமானகரமாக இழிவுப்படுத்தி பேசியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளனர்.

இவரது கணவரும் ஒரு டாக்டர் என்னும் நிலையில் இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்குமாறு உறவினர்கள் அறிவுறுத்தியபோது தனது தொழில்முறையிலான எதிர்காலம் இதனால் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் புகார் அளிக்க மறுத்து விட்டார்.
ஒருகட்டத்தில் சக டாக்டர்களின் கொடுமைகளையும் இழிச்சொல்களையும் சகித்துக்கொள்ள முடியாத பாயல் டாட்வி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆஸ்டல் அறையில் கடந்த 22-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூன்று பெண் டாக்டர்களும் சேர்ந்து தனது மனைவியை கொன்று விட்டதாக பாயல் டாட்வியின் கணவர் சல்மான் குற்றம்சாட்டியிருந்தார்.
அவரது மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உற்றார், உறவினர்களும் பழங்குடியின மக்கள் நலச்சங்கத்தினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதே கோரிக்கையை மையமாக வைத்து அவர் பணியாற்றிய மருத்துவமனை வாசலில் பாயல் டாட்வியின் தாயார், கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களும் வன்சித் புஜன் அகாடி, பீம்சேனா உள்ளிட்ட தலித், பழங்குடியின அமைப்பினரும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மகாராஷ்டிரா மாநில மருத்துவக் கல்வித்துறை மந்திரி கிரிஷ் மஹாஜன் நேற்று அம்மருத்துவமனைக்கு சென்று பாயல் டாட்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து 8 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பாயல் டாட்வியின் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் சிலரிடம் விசாரணை நடத்திய அக்ரிப்பாடா போலீசார், டாக்டர் பக்தி மெஹேரே என்பவரை நேற்று கைது செய்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்படும் மேலும் இரு டாக்டர்களான அன்க்கிட்டா கன்டேல்வால், ஹேமா அஹுஜா ஆகியோர் கைது நடவடிக்கைக்கு பயந்து மும்பை கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
எனினும், அவர்களது முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக மும்பை போலீசார் அன்க்கிட்டா கன்டேல்வால், ஹேமா அஹுஜா ஆகியோரை இன்று கைது செய்தனர். கைதான மூன்று டாக்டர்கள் மீதும் சாதி வன்கொடுமை தடுப்பு சட்டம், ‘ரேகிங்’ தடை சட்டம், தற்கொலைக்கு தூண்டிய சட்டப்பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 டாக்டர்களையும் வரும் 31ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.






