search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell phone torch"

    • அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது மின்சாரம் திடீரென தடைப்பட்டது.
    • இன்வெர்ட்டர் வசதி கூட இல்லாத அவலம் உறவினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் சென்னத் நிஷா. இவரது மகன் பாபா பக்ரூதீன். இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். பாபா பக்ரூதீன் மோட்டார் சைக்கிளை ஓட்ட சென்னத் நிஷா பின்னால் அமர்ந்து இருந்தார்.

    இவர்கள் மோட்டார் சைக்கிள் நாகை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்ற போது, எதிரே நாகூரைச் சேர்ந்த நஜிம் முஹமது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்தோஷ், சதிஸ் ஆகிய 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் பாபா பக்ரூதின் மற்றும் சென்னத் நிஷா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 3 வாலிபர்களும் நாகை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    படுகாயம் அடைந்த 3 பேருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது மின்சாரம் திடீரென தடைப்பட்டது.

    இதனால் டாக்டர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இரவு நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் இல்லாமல் எப்படி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்றும் பொது மக்களிடையே கேள்வி எழுந்தது.

    மேலும் அவசர சிகிச்சை பிரிவில் இன்வெர்ட்டர் வசதி கூட இல்லாத அவலம் அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு நாகை மட்டுமன்றி இன்வெட்டர் இல்லாத அனைத்து அரசு ஆஸ்பத்திகளுக்கும் இன்வெட்டர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×