என் மலர்
நீங்கள் தேடியது "salary hike"
- 7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.
- 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதில் உடன்பாடு இல்லை என சிஐடியூ சௌந்தரராஜன் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு ரூ.2,012, அதிகபட்சமாக ரூ.7,981ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது. அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ.1,965, அதிகபட்சம் ரூ.6,640ஆக உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், சிஐடியூ, ஏஐடியூசி ஒப்பந்தம் இறுதி செய்யதை ஏற்கவில்லை. இதனால், சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.
மேலும், 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதில் உடன்பாடு இல்லை என சிஐடியூ சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு உட்பட்ட பஞ்சாலைகள் தமிழகத்தில் கோவையில் 5 இடங்களிலும் காளையார் கோவில், கமுதக்குடி ஆகிய 2 இடங்கள் உள்பட மொத்தம் 7 ஆலைகள் இயங்கி வருகின்றது.
இங்கு 4000-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளார்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தொழிற் சங்கத்தினர் கடந்த 20-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இன்று 6-வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் அவினாசி மேம்பாலம் அருகே உள்ள சி.எஸ். டபிள்யு. மில் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

தமிழக அரசின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான். தற்போது 3,866 மதுக்கடைகள் உள்ளன. படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.750 சம்பள உயர்வு அளிக்கப்படும். டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.600, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.500 என்ற விகிதத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும்.
தமிழகத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பை பெறும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #TasmacSalaryHike #TNassembly