search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பேருந்து ஊழியர் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது- சிஐடியூ, ஏஐடியூசி வெளிநடப்பு
    X

    அரசு பேருந்து ஊழியர் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது- சிஐடியூ, ஏஐடியூசி வெளிநடப்பு

    • 7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.
    • 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதில் உடன்பாடு இல்லை என சிஐடியூ சௌந்தரராஜன் அறிவிப்பு.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 7-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்து கழக பயற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது.

    இந்நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    7 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு ரூ.2,012, அதிகபட்சமாக ரூ.7,981ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது. அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ.1,965, அதிகபட்சம் ரூ.6,640ஆக உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், சிஐடியூ, ஏஐடியூசி ஒப்பந்தம் இறுதி செய்யதை ஏற்கவில்லை. இதனால், சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.

    மேலும், 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதில் உடன்பாடு இல்லை என சிஐடியூ சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×