என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7th Pay Commission"

    • 2025 ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியோடு 7ஆவது ஊதியக்குழுவின் பதவிக்காலம் முடிவடைகிறது
    • 8 ஆவது ஊதியக்குழுவின் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக்குழுவை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் 67 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    2025 ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியோடு 7ஆவது ஊதியக்குழுவின் பதவிக்காலம் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மத்திய அமைச்சரவையில், ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் தரப்பட்டது.

    7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    மதுரை:

    7-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வினை வழங்க வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

    ஊதிய உயர்வை அமல் படுத்த வேண்டி முற்றுகை போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதன் படி மதுரை கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது.

    மதுரை புறநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் பொன்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பம்பு ஆபரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    அப்போது சிலர் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்கள் சாலைக்கு வந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர். #tamilnews

    ×