என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகள்"

    • தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
    • சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.

    வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    • ஷோரூம் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நாணயங்களை தரையில் கொட்டி எண்ணத்தொடங்கினர்.
    • சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் ஸ்கூட்டர் வாங்கித்தருமாறு கேட்டார்.

    மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் அருகே உள்ள மவுலா பகுதியை சேர்ந்தவர் பச்சு சவுத்ரி. இவர் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஒரு பெரிய டிரம்முடன் ஸ்கூட்டர் ஷோரூமுக்கு சென்றார். அங்கிருந்த ஊழியர்களிடம் எனது மகளுக்கு புது ஸ்கூட்டர் வேண்டும் என கூறிய அவர், அதற்கான தொகையாக நான் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்த நாணயங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

    ஷோரூம் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நாணயங்களை தரையில் கொட்டி எண்ணத்தொடங்கினர். 2 மணிநேரமாக நடந்த நாணயங்கள் எண்ணும் பணியின் முடிவில் மொத்தத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நாணயங்கள் இருந்தது. அவற்றை பெற்றுக்கொண்டு ஸ்கூட்டர் வழங்கினர்.

    இதுகுறித்து பச்சு சவுத்ரி கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் ஸ்கூட்டர் வாங்கித்தருமாறு கேட்டார். அப்போது அவரது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நாணயங்கள் சேகரிக்க தொடங்கினேன். தற்போது அவரது ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்றார்.

    • 18 வயது வாலிபர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுடன் கணவனை இழந்த சிறுமியின் 40 வயது தாயாரும் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது சிறுமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர்.

    இதனை அறிந்த சிறுமி தனது கணவர் மற்றும் தாயாரை கண்டித்தார் ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் மாமியார் தனது மருமகனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே வாலிபர் தனது மாமியாருக்கு தாலி கட்ட முயன்றார். இதனை கண்ட அவருடைய மனைவி தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார்.

    ஆத்திரமடைந்த அவரது தாயும் கணவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர் . மேலும் மாமியார் மற்றும் மருமகனை சரமாரியாக தாக்கினார் அவர்கள் இருவரையும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது.
    • இதையடுத்து, தந்தை - மகள் இருவரும் நேரில் சந்தித்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரைச் சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். இவர் தனது பள்ளி பருவத்தில் ஜாக்கி என்பவரை காதலித்து வந்தார்.

    அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பள்ளி பருவம் என்பதால் அவர்களது பெற்றோர் இதனை அவமானமாகக் கருதினர்.

    எனவே அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழந்தையை தத்து கொடுத்தனர். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பிறந்தன.

    இதற்கிடையே, கடந்த 2013-ம் ஆண்டு ஜாக்கி இறந்தார். அதன்பிறகு சிறு வயதில் தத்து கொடுத்த தனது மகளை கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்தார். இதற்காக தனியார் தொலைக்காட்சி உதவியை நாடினார்.

    இந்நிலையில், அவரது மகள் ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர்.

    50 ஆண்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு இங்கிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
    • அவரது கணவரும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    கர்நாடகாவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். ரேகாவின் பரிந்துரையால் அவரது கணவர் லோஹிதாஷ்வாவும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    ரேகா மற்றும் அவரது கணவருக்கும் இது 2 அவனது திருமணமாகும். ரேகாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சுங்கடகட்டே பேருந்து நிலையம் அருகே ரேகாவும் அவரது மூத்த மகளும் சாலையை கடப்பதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த லோஹிதாஷ்வாவுக்கும் ரேகாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த லோஹிதாஷ்வா தான் மறைந்திருந்த கத்தியை எடுத்து ரேகாவை 11 முறை கொடூரமாக குத்தி கொன்றார். இதனை நேரில் பார்த்த மூத்த மகள் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் லோஹிதாஷ்வா அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • துக்கம் தாழாமல் அழுது கொண்டே இருந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார்.
    • வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ள காற்றாடி மூடு பகுதியைச் சேர்ந்த வர் வேலம்மாள் (வயது 78), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்.

    இவருக்கு பகவதி அம்மாள் (57) என்ற மகளும் 2 மகன்களும் உள்ளனர். தற்போது வேலம்மாள், மகள்-மருமகன் ராதா கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்த வேலம்மாள் நேற்று முன் தினம் இறந்தார். அவரது உடலை மறுநாள் (நேற்று) தகனம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். அப்போது தாயின் உடல் அருகே பகவதி அம்மாள் துக்கம் தாழா மல் அழுது கொண்டே இருந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். உடனடி யாக அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்ட ர்கள் பகவதி அம்மாள் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    தாய் இறந்த சோகத்தில் மகளும் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பகவதி அம்மாள் உடலை வீட்டிற்கு எடுத்து வந்த உறவினர்கள், ஏற்கனவே தகனத்திற்காக வைத்திருந்த வேலம்மாள் உடல் அருகே வைத்தனர்.

    இறந்த பகவதி அம்மா ளுக்கு காயத்ரி (30) என்ற மகளும், அஜித் (27) என்ற மகனும் உள்ளனர்.

    ஒரே நேரத்தில் தாய்-மகள் இறந்ததை எண்ணி அங்கு வந்திருந்த பலரும் கண்ணீர் விட்டனர். தொடர்ந்து வேலம்மாள் உடல் மட்டும் நேற்று தகனம் செய்யப்பட்டது.

    பகவதி அம்மாளின் மகன் அஜித், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர் வந்ததும் பகவதி அம்மாள் உடல் தகனம் செய்யப்படும் என உறவி னர்கள் தெரிவித்தனர்.

    • போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்
    • கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    பொங்கல் அன்று தக்கலை அருகே கைசாலவிளை மேக்காமண்டபம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஒவ்வொரு வீடாக சென்று பார்ப்பதும் செல்வதுமாக இருந்துள்ளார்.

    இதை கவனித்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவரது பெயர் கமலாட்சி எனவும், தனது மகளுக்கு பொங்கல் கொண்டு வந்ததாகவும் வீடு அடையாளம் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தனது மகளின் பெயர் ஊர் கேட்ட போது மகள் பெயர் கிரேசி எனவும் ஊர் பெயர் தெரியவில்லை எனவும் கூறினார். மேலும் தனது மகளை பார்க்க மேக்காமண்டபம் வந்து இந்த பாதை வழியாக வருவேன் எனவும் கூறினார்.

    பொதுமக்கள் மூதாட்டியை அமர வைத்து விசாரிக்க தொடங்கினர். பல மணி நேரம் ஆன பின்பும் மகள் வீடு கண்டுபிடிக்க முடியாததால் கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மூதாட்டியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூதாட்டியின் வீடு புதுக்கடை காட்டுவிளை என கூறியதால் போலீசார் புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மேலும் மூதாட்டியின் போட்டோவையும் அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக புதுக்கடை போலீசார் விசாரணை செய்த போது மூதாட்டியின் கணவர் செல்லையா எனவும், அவர் இறந்த பிறகு மகன் தாஸ் வீட்டில் வசித்து வருவதும் பொங்கல் அன்று மகளை பார்க்க பொங்கல்படி கொண்டு சென்றுள்ளார். மகளின் வீடு ஆற்றுகோணம் பகுதியில் உள்ளது என தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கொற்றிகோடு போலீசாருக்கு புதுக்கடை போலீசார் தெரிவித்தனர். பின்னர் கொற்றிகோடு போலீசார் ஆற்றுகோணம் சென்று மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மூதாட்டி தனது மகளையும், பேரக்குழந்தையும் பார்த்து கண் கலங்கினார். பின்னர் மூதாட்டியை அவரது மகளுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மூதாட்டி வீடு அடையாளம் தெரியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • சுசிந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோயல் (வயது 35). இவர் வங்கியில் தினசரி கலெக்சன் வேலைக்கு சென்று வருகிறார்.

    கடந்த 2-ந்தேதி வேலைக்கு சென்றார். இவர் மாலை வீட்டிற்கு வந்தபோது, மனைவி ஜெர்லின் (27), மகள் ஜெர்சிகா (9), ஆகியோரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் ஜோயல் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த தாய், மகள் காணாதது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசையா?
    • தக்கலையில் இன்று காலை பரபரப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

    இன்று காலை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷைஜாராணி (வயது 42), அவரது மகள் ஆதிரா (8) மற்றும் பத்மலதா(55), பிரியா (45), சாந்தா (65) ஆகியோர் பஸ்சில் புறப்பட்டு வந்தனர்.

    அவர்கள் தக்கலை பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மண்டைக்காடு செல்லும் பஸ்சில் ஏறினர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஷைஜாராணி கையில் யாரோ பிளேடால் கீறி உள்ளனர். இதனால் அவர் வலியால் கத்தினார்.

    மேலும் அவரது மகள் ஆதிராவுக்கும் அதேபோல் காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்படவே, பஸ்சை தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பிக்பாக்கெட் திருடர்கள் யாராவது, பேக்கை கிழிக்கும் போது தாய்-மகள் கைகளை தெரியாமல் கிழித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பஸ்சில் வந்த ஓருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ஷைஜாராணி, அவரது மகள் ஆதிரா சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    • போக்குவரத்து கழக அதிகாரிகள் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டார்
    • பஸ் டிரைவர், கண்டக்டர் அந்த சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

    நாகர்கோவில்:

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 14 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.

    கன்னியாகுமரியில் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு செல்வதற்காக தயாரானார்கள். இதை யடுத்து கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ்சில் வந்தனர்.பஸ் வடசேரி பஸ் நிலை யத்தை வந்ததும் பஸ்சி லிருந்து அனைவரும் இறங்கினார்கள். பஸ்சை விட்டு இறங்கிய சிறிது நேரத்தில் 8 வயது சிறுமியை காணவில்லை என்று அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போக்கு வரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களி டம் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது பஸ்சிலிருந்து சிறுமி மாயமானது குறித்த தகவலை தெரிவித்தனர். உடனே போக்குவரத்து கழக அதிகாரிகள் அவர்கள் பயணம் செய்த பஸ்ஸின் விபரங்களை கேட்டு அறிந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்ட ரை தொடர்பு கொண்டு பேசினார்கள்.

    அப்போது பஸ் வடசேரியில் இருந்து மீண்டும் கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தற்போது அண்ணா பஸ் நிலையத்தில் நிற்பதாகவும் தெரிவித்தனர்.போக்கு வரத்துக் அதிகாரிகள் அந்த சிறுமி பஸ்சில் இருக்கிறாரா? என்று பார்க்குமாறு கண்டக்டரிடம் தெரிவித்தனர். உடனே கண்டக்டர் பஸ்ஸின் இருக்கைகளில் பார்த்தார். அப்போது சிறுமி பஸ்ஸின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அந்த சிறுமியை மீட்டனர்.

    இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் உறவி னர்களுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவி னர்கள் அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்த னர். பஸ் டிரைவர், கண்டக்டர் அந்த சிறுமியை அவர்களி டம் ஒப்படைத்தனர். அதி காரிகளின் துரித நடவ டிக்கையை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • இரணியல் போலீசார் தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் மேனகா (வயது 39).

    இவரது கணவர் ஜோஸ்லின் பாபு,கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு 12 வயது மகளுடன் வசித்து வந்த மேனகா, 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (45) என்ற ஓட்டல் தொழிலாளியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு 2 குழந்தைகளுடன் மேனகா குருந்தன் கோட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று குருந்தன்கோடு வந்த ஜெய பால், ஆலயத்திற்கு சென்று வந்த மேனகா மற்றும் குழந்தைகளை குருந்தன் கோடு கிராம ஊராட்சி சேவை மையம் முன்பு தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்துள்ளார்.

    மேலும் மகனை தன்னு டன் அனுப்ப கூறி தகராறு செய்து உள்ளார். ஆனால் மகனை கொடுக்க மேனகா மறுத்தார். இதனால் ஆத்தி ரம் அடைந்த ஜெயபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேனகாவை வெட்டினார்.

    இதில் மேனகாவுக்கு கழுத்து, நாடி, முதுகு, விரல் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது 12 வயது மகள் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே ஜெயபால் தப்பி ஓடி விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மேனகா மற்றும் அவரது மகளைஅங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்து வர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மேனகாவின் உறவுப் பெண் சிஜி (27) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.

    • 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த சோமனூர் ரெயில் நிலையம் அருகே 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா காயத்ரி,சப் -இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் 15 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பிணமாக கிடந்தனர்.உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் இறந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் அடுத்த சாமளாபுரம் பவலந்தான்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி தனலட்சுமி (32),மகள் தட்சணா (15) என்பது தெரியவந்தது. சரவணன் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு தனலட்சுமி மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற அவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×