என் மலர்
நீங்கள் தேடியது "பணம் நகை"
- தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
- சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது
- பீரோ உடைக்கப்பட்டு, 23 பவுன் நகை 1,50,000 பணம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70 ).
இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவருடைய மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில் சம்பவதன்று 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து ஊரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்றனர்.
பின்னர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 23 பவுன் நகை மற்றும் 1,50,000 பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ராமசாமி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






