என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money"

    • உயரத்தில் இருந்து பணப்பையை பிரித்த குரங்கு, அதில் உணவு இல்லாததால் ஏமாற்றத்துடன் ரூபாய்த்தாள்களை பிரித்து கீழே வீசியது.
    • மற்ற நோட்டுகள் கிழிந்தும், பதுக்கப்பட்டும் மாயமாகின.

    மரத்தில் இருந்து குரங்கு சேட்டையால் பணமழை கொட்டுவதும், அதைப் பிடிக்க மக்கள் போட்டாபோட்டி போடும் காட்சியும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தொண்டாபூர் கிராமத்தை சேர்ந்த அனுஜ்குமார், தனது தந்தை ரோகிதாஸ் சந்திராவுடன் பத்திரப்பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் ரூ.80 ஆயிரம் ரொக்கத் தொகையை சிறிய பையில் வைத்து இருந்தனர்.

    ரோகிதாஸ், தனது வக்கீலுடன் பத்திரப்பதிவு குறித்து பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த குரங்கு, கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை உணவுப் பொட்டலம் என்று நினைத்து தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் உச்சிக்கு ஓடிவிட்டது. உயரத்தில் இருந்து பணப்பையை பிரித்த குரங்கு, அதில் உணவு இல்லாததால் ஏமாற்றத்துடன் ரூபாய்த்தாள்களை பிரித்து கீழே வீசியது. சில நோட்டுகளை கிழித்து வீசியது.

    மரத்தில் இருந்து பண மழை கொட்டியதால் அங்கிருந்த பொதுமக்கள் அவற்றை எடுக்க போட்டி போட்டு முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் ரோகிதாசுக்கு ரூ.52 ஆயிரம் மட்டுமே மீட்டுக் கொடுக்கப்பட்டது. மற்ற நோட்டுகள் கிழிந்தும், பதுக்கப்பட்டும் மாயமாகின. இதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வையை ஈர்த்தது.



    • இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்கு செலுத்தாமல் கிடங்கில் கொள்ளவிற்கு மேல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார் .
    • ஆய்வாளர் தெய்வசிகாமணிஆகியோர் விசாரணை செய்து ரூ 21,91,711 கையாடல் செய்ததாக சீனிவாசுவை கைதுசெய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    நாமக்கல்:

    மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் மூலம் கிராமபுறங்களில் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய இடுபொருட்களான உரம், பூச்சிமருந்து, களைக்கொல்லி மற்றும் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

    இவற்றை இப்கோ இ-பசார் என்னும் துணை நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மையத்தை நிறுவி விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் செயல்பட்டு வரும் இ பசாரில் நாமக்கல் லைன் தெருவைச்சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு(வயது 30) என்பவர் விற்பனை யாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்கு செலுத்தாமல் கிடங்கில் கொள்ளவிற்கு மேல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார் . இதனால் சந்தேகம் அடைந்த இ பசார் மாநில அலுவலர் ஹைதராபாத்தை சேர்ந்த புன்னம்ராஜு கொகக்கரராயப்பேட்டை கிளை அலுவலகத்தில் தணிக்கை செய்தார்.

    அப்போது உரவிற்பனை செய்து நிறுவனத்திடம் பணம் கட்டாமல் சீனிவாசன் தனது இந்தியன் வங்கி கணக்கில் செலுத்தியது தணிக்கையில் தெரிய வந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புன்னம்ராஜ் புகார் அளித்தார்.

    இது குறித்து மாவட்ட குற்றப்பபிரிவு துணை கண்காணிப்பாளர் லட்சுமணன், ஆய்வாளர் தெய்வசிகாமணிஆகியோர் விசாரணை செய்து ரூ 21,91,711 கையாடல் செய்ததாக சீனிவாசுவை கைதுசெய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். பருவ மழை காலத்தில் உரம் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் உர மோசடியால் கொக்கராயன் பேட்டையில் இப்கோ இ பசார் கடை மூடப்பட்டதால் விவசாயிகள் கடையை திறக்க கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • வாலிபர் ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
    • காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று கார்த்திக் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு சென்றுள்ளார்.வஞ்சிபாளையம் பகுதியில் வந்தபோது வாலிபர்ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.சிறிது தூரத்தில் காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.அப்போது ஏற்கனவே அங்கு இருந்த 2 வாலிபர்களும் சேர்ந்து, திடீரென கார்த்திக்கை பணம்கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன கார்த்திக் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

    இதையடுத்து மொபைலில்இருந்து கூகுள் பே மூலம் ரூ.90 ஆயிரத்தை 2 பேரின்வங்கி கணக்கிற்கு பிரித்துகார்த்திக் அனுப்பி உள்ளார். பின்னர் 3 பேரும்அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி போலீசார்வழக்குபதிந்து விசாரணைநடத்தினர்.மேலும் வங்கி கணக்குஎண் மற்றும் செல்போன்எண்களை கைப்பற்றி விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது வஞ்சிபாளையம்பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (26), தனபாலன்(26), சுபாஷ் (26) ஆகியோர் என தெரிய வந்தது.இதையடுத்து 3 பேரையும்திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்மற்றும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • நான்கு தவணைகளாக ரூ. 34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார்.
    • மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார்.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் மெயின் ரோடு பட்டமங்கலம் மனோகர் மகள் கீர்த்தனா (வயது 22).

    இவர் தனது செல்போன் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் உறவினர்கள் போல் பேசி அவசரமாக பணம் உதவி தேவைப்படுகிறது எனக்கூறி கூகுள் பே மூலம் நான்கு தவணைகளாக ரூ.34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் விசாரணை செய்ய உத்தரவிட்டார். சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்–குமரன், தலைமை காவலர் முருகதாஸ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியின் வங்கி கணக்கினை முடக்கி ரூ.34,000 பணத்தினை மீட்டனர்.

    மீட்ட பணத்தை கீர்த்தனாவிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார்.

    மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    • 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த பணம் திருட்டு.
    • இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருட்டு.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி கடையில் உள்ள பொருட்களை திருடி உள்ளனர். மேலும், 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சம் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்திற்கு சென்று கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    முகத்தை துணியால் மூடிய நிலையில் திருடிய நபர் பச்சை கலர் டி சர்ட் மற்றும் கருப்பு கலர் டிராயர் அணிந்து இருந்தார்.

    இது பற்றி மன்சூர் அலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தவுபிக் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் தவுபிக்(வயது 37). இவர் பல்லடம் பனப் பாளையம் பகுதியில் உள்ள, தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்குச் செல்வதற்காக மில்லில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள், பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் தர மறுக்கவே அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள செல்போன், ரொக்கம் ரூ.10,000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து காயத்துடன் தொழிற்சாலைக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். பின்னர் இது பற்றி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    கடையில் பணம் கொள்ளை

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த பணம், மளிகை பொருட்கள் கொள்ளை–யடிக்கப்பட்டிருந்தது.

    புகார்

    இது குறித்து சரவணன் எலச்சிபாளையம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் ரூ.16 ஆயிரத்து 350 திருட்டு போனது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செயதனார்.
    • இதில் அண்ணாமலைக்கு 10 மாத ெஜயில் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு வழங்கினார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏலச்சீட்டு நடத்தினார். இதில் 60-க்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக 2014-ல் அழகாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது மோசடி புகார் என்பதால் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அண்ணாமலைக்கு 10 மாத ெஜயில் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு வழங்கினார்.

    • சேலம் ஸ்ரீரங்கபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சத்திய சரவணன். இவரது மனைவி ஆட்டோவில் சென்ற போது 4 பவுன் செயின் மற்றும் ரூ.2000 பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.

    சேலம்:

    சேலம் ஸ்ரீரங்கபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சத்திய சரவணன். இவரது மனைவி சந்தியா (வயது 45). இவர் சம்பவத்தன்று சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது கைப்பையில் வைத்திருந்த 4 பவுன் செயின், ரூ.2000, ஏடிஎம் கார்டை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்தியா சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர். 

    • தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    தேனி:

    தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சரண்யா (வயது32). இவர் புதிதாக நாட்டுச்சர்க்கரை தொழிற்சாலை திறக்க உள்ளதால் அதற்கு தேவையான பொருட்களை வாங்க பழனிசெட்டிபட்டி வந்தார். அங்கு தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் குணசீலன் (34). இவர் மதுரையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது உறவினர் மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொண்டு தாமரைக்குளம் வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • பரசு–ராமன் அக்ரஹாரம் பகுதி–யில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சம்பவஇடத்திற்கு சென்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை பரசுராமன் அக்ரஹாரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேற்கு போலீசாருக்குதகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    போலீசார் வருவதை பார்த்ததும் சீட்டு விளையா–டியவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்கள் 5 பேரை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த சசிகுமார் (வயது 40), ராஜேந்திரன் (41), பரிசுத்தம் நகரை சேர்ந்த சுப்ரமணியன் (58), விக்னேஷ் (27), ராகவேந்திரன் (40) என்பதும், பணம் வைத்து சீட்டு விளையா டியதும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமார், ராகவேந்திரன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    • சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் ஜங்ஷன் அருகே உள்ள ஓட்டலில் காரை நிறுத்தினர். உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பிய போது, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.
    • மேலும் காரில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ கேப்பன் (வயது 40). இவர் நேற்று இரவு காரில் குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் ஜங்ஷன் அருகே உள்ள ஓட்டலில் காரை நிறுத்தினர். உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பிய போது, அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் காரில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஓட்டல் வாசலில் இருந்த சி.சி.டி.வி கேமிராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் சென்னை தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (45). இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானா அருகே வந்த போது, அங்குள்ள ஓட்டலில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு, காருக்குள் இருந்த ரூ.5000, 2 பைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அன்னா தானப்பட்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×