search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youngster arrest"

    • வாலிபர் ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
    • காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று கார்த்திக் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு சென்றுள்ளார்.வஞ்சிபாளையம் பகுதியில் வந்தபோது வாலிபர்ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.சிறிது தூரத்தில் காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.அப்போது ஏற்கனவே அங்கு இருந்த 2 வாலிபர்களும் சேர்ந்து, திடீரென கார்த்திக்கை பணம்கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன கார்த்திக் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

    இதையடுத்து மொபைலில்இருந்து கூகுள் பே மூலம் ரூ.90 ஆயிரத்தை 2 பேரின்வங்கி கணக்கிற்கு பிரித்துகார்த்திக் அனுப்பி உள்ளார். பின்னர் 3 பேரும்அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி போலீசார்வழக்குபதிந்து விசாரணைநடத்தினர்.மேலும் வங்கி கணக்குஎண் மற்றும் செல்போன்எண்களை கைப்பற்றி விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது வஞ்சிபாளையம்பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (26), தனபாலன்(26), சுபாஷ் (26) ஆகியோர் என தெரிய வந்தது.இதையடுத்து 3 பேரையும்திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்மற்றும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • 172 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நவநீதகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 38) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.71,832 மதிப்பிலான 172 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி யாரேனும் மதுவை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனரா? என்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் எஸ்.கைகாட்டியை சேர்ந்த நந்தகுமார்(43) என்பதும், மது விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் சுமார் 12 மது பாட்டில்கள் இருந்ததும். அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜோதிடம், மாந்திரீகம், போன்றவற்றை வீட்டில் வைத்து விமலாதேவி செய்து வருகிறார்.
    • மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு வாலிபர் தப்பிசென்றார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வசிப்பவர் விமலாதேவி ( வயது 58) .இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் ஜோதிடம், மாந்திரீகம், போன்றவற்றை வீட்டில் வைத்து செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 4ந்தேதி, இவரது வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் திருமண தோஷம் கழிக்க மந்திரித்து கயிறு கட்ட வேண்டுமென வந்துள்ளார்.

    வீட்டை நோட்டமிட்ட அவர் மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, திடீரென மூதாட்டியின் வாயில் துணி வைத்து அடைத்து அவரை, அங்கிருந்த சேரில் உட்கார வைத்து கயிற்றினால் கட்டி போட்டுவிட்டு, மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகள், பீரோவில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்.

    விமலாதேவி இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் கணபதிபாளையத்தில் விமலாதேவியை கட்டிப்போட்டு நகைகள் திருடியது தெரிய வந்தது .இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சசி மகன் சாஜன் லால்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3.5 சவரன் தங்க நகைகளை மீட்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை அருகே வேலையை விட்டு நிறுத்தியதால் எஸ்.எம்.எஸ். அனுப்பி ஜவுளிக்கடை அதிபரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45). இவர் ரெடிமேடு ஷோ-ரூம் நடத்தி வருகிறார். இவரது ஷோ-ரூமில் சவுரிபாளையத்தை சேர்ந்த சுஜித்குமார்(33) என்பவர் பணியாற்றி வந்தார். சுஜித் குமார் நடவடிக்கை சரி இல்லாததால் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேல் வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.

    இந்நிலையில் சக்திவேலின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் சுஜித்குமார் தொடர்ந்து மிரட்டல் எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி தொந்தரவு கொடுத்ததோடு, அவதூறான தகவல்களை பரப்பி உள்ளார். இதுகுறித்து சக்திவேல் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சுஜித்குமார் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    பேஸ்புக் மூலம் பழகி கல்லூரி மாணவி உள்பட 20 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கல்லரா பகுதியை சேர்ந்தவர் சைஜூ. இவரது மகன் ஜின்சு (24). ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் கடந்த 3 மாதங்களாக பேஸ்புக் மூலம் சில பெண்களிடம் பழகி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். பின்னர் அவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் ஜின்சு பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். அவரிடம் நன்கு பழகி வந்துள்ளார். அவரை பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நேற்று வாலிபர் ஜின்சு அந்த மாணவியை காரில் கல்லூரிக்கு அழைத்து சென்றார். காரில் இருந்து இறங்கிய மாணவி ஜின்சுவை பார்த்து சிரித்து கொண்டே சென்றுள்ளார்.

    இதனை கல்லூரி முதல்வர் பார்த்து விட்டார். அவருக்கு வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு அரி சங்கருக்கு புகார் தெரிவித்தார்.

    அவர் சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து விசாரணை நடத்தினார். மாணவியின் செல்போன் மூலம் பேசி ஜின்சுவை தனி இடத்திற்கு வருமாறு அழைத்தனர். அதன்படி ஜின்சு அங்கு வந்தார்.

    அங்கு மறைந்து இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது கல்லூரி மாணவி மட்டுமின்றி மேலும் 19 பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒத்துக் கொண்டார்.

    அவரை கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×