என் மலர்
நீங்கள் தேடியது "molestation"
- ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.
- விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதாபத்தில் மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தங்கி இருந்து மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
ரஹமான் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இவரது அட்டூழியம் தினமும் நீடித்தது.
இதனால் 3 மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ரஹமான் மாணவிகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் 5 போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சஞ்சல்குடா ஜெயிலில் அடைத்தனர்.
ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் விடுதிக்கு சென்று அங்கு தங்கி உள்ள மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது காவலாளி மிரட்டி பலாத்காரம் செய்ததாக சில மாணவிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதை கேட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
காவலாளி ரஹமான் மேலும் சில மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஏற்கனவே விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி நிர்வாகிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.
அதிக அளவில் பாலியல் புகார்கள் வந்ததால் போலீசார் ரஹ்மானை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் சந்தீப் லமிச்சனே இடம் பெற்றிருந்தார்.
- காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் கூறப்பட்டபோது சந்தீப் லமிச்சனே வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.
பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார்.
இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், வரும் ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கபட உள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சந்தீப் இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளையும், 52 டி20 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு இவர் இடம் பெற்றார். 2018-ம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளும், 2019-ம் ஆண்டுகளில் 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை.
- ஒலிம்பிக்கில் பங்கேற்ற எகிப்திய மல்யுத்த வீரரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
- மல்யுத்த வீரர் விடுவிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.
பாரிஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் 11-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற எகிப்திய மல்யுத்த வீரரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
26 வயதான முகமது எல்சைட், மதுபோதையில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரை போலீசார் கைது செய்துள்ளதாக பாரீஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர் விடுவிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.
- பத்லாபூரில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்லாபூர்:
மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, நகரம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்படுள்ளது. மேலும் பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் காரணமாக ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ரெயில்வே வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக சிஆர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் வசிக்கும் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்தால் நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்லாபூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா வணிகம் தடையின்றி நடைபெறுகிறது.
- நாளுக்கு நாள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
கோவையில் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை விடுதி அறைக்கு வரவழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காததும் கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவையில் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை விடுதி அறைக்கு வரவழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காததும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா வணிகம் தடையின்றி நடைபெறுகிறது. கஞ்சா உள்ளிட்ட அனைத்துப் போதைப் பொருட்களுக்கும் அடிமையாகிவிட்ட இளைய சமுதாயம், கொடூரமான குற்றங்களைக்கூட எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக செய்யும் மனநிலைக்கு வந்திருக்கிறது. இன்னொருபுறம் தமிழ்நாட்டில் எந்தக் குற்றங்களை வேண்டுமானாலும் செய்துவிட்டு, தண்டனையில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழல் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்குக் காரணமாகும். தமிழக அரசு, காவல்துறை ஆகியவற்றின் தோல்வியையே இக்கொடிய நிகழ்வு காட்டுகிறது.
தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம்தான் காரணம் என்பதால், அதன் புழக்கத்தைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நான் நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், நாளுக்கு நாள் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால், பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா? பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் குழந்தைகளை அச்சமின்றி அனுப்பி வைக்க முடியுமா? என்ற ஐயம் எழுகிறது. மக்கள் மத்தியில் நிலவும் இந்த ஐயமும், அச்சமும் போக்கப்படவில்லை என்றால், பெண் கல்வி பாதிக்கப்படுவது உட்பட மோசமான விளைவுகள் ஏற்படும். அத்தகைய விளைவுகள் ஏற்படுவதை தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை ஆகும்.
கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் கஞ்சா விற்பனை நடைபெறவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். காவல்துறையில் உள்ள போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவை வலுப்படுத்தி, போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அன்புமணி தெரிவிக்கப்பட்டுள்ளது.






