என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  தேர்வு எழுத வந்த பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை- வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்குன்றத்தில் தேர்வு எழுத வந்த பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  அம்பத்தூர்:

  செங்குன்றம், காமராஜர் தெருவை சேர்ந்த தாய்-தந்தையை இழந்த மாணவி ஒருவர் திருநின்றவூரில் உள்ள சேவாலயா இல்லத்தில் தங்கி பிளஸ்-1 படித்து வருகிறார்.

  கடந்த 12 -ந் தேதி செங்குன்றத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத சென்ற மாணவி திடீரென மாயமானார்.

  இது குறித்து சேவாலயா இல்ல நிர்வாகி செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தேர்வு எழுத வந்த மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

  இந்தநிலையில் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே நின்ற மாணவியை போலீசார் மீட்டனர்.

  இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைமுருகனை கைது செய்தனர். அவர் மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, தேனி, ஆகிய இடங்களில் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருப்பது தெரிந்தது.

  இதையடுத்து துரை முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
  Next Story
  ×