என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 arrest"
- அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன்,மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு லோடு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் மானுரை சேர்ந்த இசக்கிமுத்து (39), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி பாண்டி, நெல்லை டவுனை சேர்ந்த மடத்தான், சிவா ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
- ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி:
ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர்களின் மகன்கள் ஈடுபட்டதாக தெலுங்கானா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் எதிர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஐதராபாத், பகாடி ஷரிப், ஷகினா நகர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. சிறுமியின் தாய் மாமா வீடு சுல்தான் ஷகி பகுதியில் உள்ளது. கடந்த மாதம் 31-ந் தேதி மாலை 6 மணிக்கு தனது தாய் மாமா வீட்டிற்கு சென்றார்.
இரவு 8 மணி அளவில் மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். ஷெரிப் காமன் என்ற இடத்தில் வந்த போது, காரில் வந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு சிறுமியிடம் இரவு நேரத்தில் தனியாக எங்கே செல்கிறாய் என்று விசாரித்தார்.
அப்போது சிறுமி தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். சிறுமியை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கார் டிரைவர் தெரிவித்தார்.
இதனை நம்பிய சிறுமி காரில் ஏறி உட்கார்ந்தார். அப்போது கார் டிரைவர் தனது நண்பரான முகமத் ருக்தே அஹமதிற்கு போன் செய்து வரும் வழியில் காரில் ஏறிக் கொள்ளும்படி தெரிவித்தார். அவரது நண்பரும் வழியில் காரில் ஏறிக்கொண்டார். இதையடுத்து கார் டிரைவர் தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். பின்னர் கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
நள்ளிரவு 12 மணிவரை சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் சுல்தான் ஷகி அருகே சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி மயக்கமடைந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் கார் டிரைவர் ஷேக் கலீம் ஹாலி மற்றும் அவரது நண்பர் முஹமத் ருக்தே அஹமத் இருவரும் சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த சிறுமி கற்பழிப்பு சம்பவங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரையில் விபசாரம் தொடர் கதையாகி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தர விட்டார்.
மாநகர தலைமையக துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில், விபசார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் மாநகரம் முழுவதும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அப்துல்கலாம் ஆரிப்பை (23) செல்போனில் பெண் தொடர்பு கொண்டார். அவர், “எங்களிடம் விபசார அழகிகள் உள்ளனர். வீட்டில் வைத்து தொழில் செய்து வருகிறோம். போலீஸ் பிரச்சினை இல்லை” என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
பயந்துபோன அப்துல்கலாம் பதில் சொல்லாமல் செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து அவர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அப்துல்கலாம் மூலமாகவே குற்றவாளிகளை கைது செய்வது என்று போலீசார் திட்டமிட்டனர். போலீசாரின் திட்டப்படி அப்துல்கலாம் மீண்டும் அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அவர், “நான் பணம் கொடுக்க தயார், எங்கு வரவேண்டும்?” என்று கேட்டுள்ளார். அந்த பெண் கண்ணனேந்தல் பகுதிக்கு வரச் சொல்லியதன் பேரில் அங்கு சென்றார்.
அவரை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் பாரதிநகர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு 2 பெண்கள் இருந்தனர். அப்துல் கலாமிடம் பணம் வாங்கிக் கொண்ட கும்பல், அவரை பெண்ணுடன் தனி அறைக்கு அனுப்பி வைத்தது. அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நாராயணபுரம் கோகலே தெருவைச் சேர்ந்த பாண்டிகுமார் (36), புதூர் மகாலட்சுமி நகர் தேவராஜ் மனைவி பிரசன்னாதேவி (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார். போலீசார் இருவரையும் திருப்பாலை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தன். இவர் திருவொற்றியூரில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டிக்கெட் எடுக்க சென்றார். பின்னர் திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதனை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து திருவொற்றியூர்போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்த ஜெகன் மற்றும் காஜா மொய்தீன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கஞ்சா கும்பலையும் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம கணேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திங்கள்நகர் சந்தை, இரணியல் சந்திப்பு ஆகிய இடங்களில் ரோந்து வரும்போது அங்கு சந்தேகப் படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் நெய்யூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 29), ராஜேஷ் (26) என்பது தெரியவந்தது.
போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது இருவரும் பையில் தலா 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அய்யப்பன், ராஜேசை கைது செய்தனர்.
மேலும் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது யார்? எந்தெந்த இடங்களில் விற்பனை செய்தனர். யார், யாருக்கெல்லாம் கஞ்சா சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் டேவிட் பீட்டர் (வயது47), பாக்கியலட்சுமி (36). இவர்கள் கொடைக்கானலில் நர்சிங் கல்லூரி அமைக்கப்போவதாக கூறி பரணிகுமார் என்பவரிடம் ரூ.6 லட்சம் வாங்கி உள்ளனர்.
பரணி குமாரின் மனைவி மீனாகுமாரியை கல்லூரியின் முதல்வராக நியமிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் கல்லூரி கட்டாமல் மோசடி செய்துள்ளனர்.
மேலும் சிலரிடமும் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளனர். இது குறித்து டி.எஸ்.பி. ஜஸ்டின் பிரபாகரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ரெய்கானா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம், சொகுசு கார், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சொசைட்டி அமைக்கப்போவதாக கூறி மேலும் பலரிடம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews