என் மலர்
நீங்கள் தேடியது "Death threats"
- ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து 3, 4 முறை போன் செய்தார்.
- முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டல்.
மும்பை :
உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முகேஷ் அம்பானிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மும்பை கிர்காவ் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து 3, 4 முறை போன் செய்தார். அவர், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.
இதுகுறித்து உடனடியாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து மிரட்டியவரின் செல்போன் எண்ணை வைத்து அவரை தகிசர் பகுதியில் மடக்கி பிடித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் 'அண்டிலா' ஆடம்பர அடுக்குமாடி பங்களா அருகில் வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் முக்கிய போலீஸ் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று முகேஷ் அம்பானிக்கு வந்த கொலை மிரட்டல் போனால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சிலர் பெண்களை கேலி, கிண்டல் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது23), விஜயகுமார்(29) ஆகிய இருவர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, மணிகண்டன், விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே ஊர்வலத்தில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- அதே ஊரை சேர்ந்த வினோத், மலையப்பன், குப்பன் ஆகியோர் சாவு .
கடலூர்:
கடலூர் செல்லங்கு ப்பத்தை சேர்ந்த பிரசாந்த (24)., இவர் கடந்த 8ம் தேதிதனது பாட்டி இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் வந்தார். கோட்டலாம்பாக்கம் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் அதே ஊரை சேர்ந்த வினோத், மலையப்பன், குப்பன் ஆகியோர் சாவு ஊர்வலத்தில் மதுகுடித்து ஆட்டம் போட்டுள்ளனர். அவர்களிடம் ஏன் இப்படிகுடித்து விட்டுபிரச்சனை செய்கிறீர்கள் என்று பிரசாந்த் கேட்டுள்ளார்இதனால் ஆத்திரமடைந்த மூவரும் பிரசாந்தை அசிங்கமாக திட்டிதாக்கிகொலைமிரட்டல்விடுத்தனர். காயமடைந்த பிரசாந்த் கடலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்கள்.
- வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி மாதத் தவணை கட்டாத நபருக்கு வங்கி ஊழியர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
- பணம் கட்ட வேண்டும் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 47).இவர் தனியார் வங்கியில் 2 லட்சத்து 10 ஆயிரம் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக லோன் வாங்கியதற்கு மாத தவணை கட்டவில்லை. இதன் காரணமாக வங்கி ஊழியர்கள் கருணாமூர்த்தி வீட்டிற்கு நேரில் சென்று பணம் கட்ட வேண்டும் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் கருணா மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வங்கி ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளையான்குடி பேரூராட்சி பெண் தலைவருக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளார்.
- இது குறித்து மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி தலைவராக தி.மு.க. வை சேர்ந்த ஜெமிமா உள்ளார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. நகரச் செயலாளர் நஜூமுதீன் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்தலில் தோல்வியடைந்தார்.
இதனால் தி.மு.க. வைச் சேர்ந்த ஜெமிமா என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 13-வது வார்டில் நடந்த இடைதேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தி.மு.க. நகர்செயலாளர் நஜூமுதின் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நஜூமுதின் மீண்டும் பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெமிமாவை தலைவர் பதவியிலிருந்து விலக ஒரு தரப்பினர் வற்புறுத்தி வருகின்றனர்.ஆனால் பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ஜெமிமா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் ஜெமிமா, 13-வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஜூமுதீன் அ.தி.மு.க. உறுப்பினர் நாகூர் மீரா ஆகிய 3 பேர் மட்டும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 15 வார்டு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர். கூட்டம் நடத்த போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைவர் ஜெமிமா நிருபர்களிடம் கூறிய தாவது:-
இளையான்குடி பேரூராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி எனக்கும், எனது கணவருக்கும் நஜூமுதீன் தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது குறித்து மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் விவகாரத்தில் மாவட்ட செயலாளர், என்ன சொல்கிறாரோ? அதை கேட்பதற்கு தயாராக உள்ளோம். இதற்கிடையில் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இது தொடர்பாக தி.மு.க. நகர்செயலாளர் நஜிமுதின் கூறும்போது, இந்த குற்றச்சாட்டு பொய்யான தாகும். நான்யாரையும் மிரட்டவும் இல்லை. இதுபற்றி மாவட்ட செயலாளரிடம் தெரிவித்து உள்ளேன்.
தற்போது தமிழக முதல்வர் உள்ளாச்சி பிரதிநிதிகள் மாநாட்டில் நேரில் பாராட்டு தெரிவித்த இளையான்குடி பெண் பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் இளையான்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பண்ருட்டி பகுதியை சேர்ந்த மகன்- மருமகள் கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
- கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர்.
கடலூர்:
பண்ருட்டி தோப்புகொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 75). அவரது மனைவி ரோஜாவர்ணம் . இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் . அனைவருக்கும் திருமணம் நடந்து தனித்தனி குடும்பம் நடத்தி வருகின்றனர். எனது 3 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் தனித்தனியாக வீடு கட்டி அவர்கள் பாகத்தில் குடியிருந்து வருகின்றார்கள். இவர்கள் 3 பேரும் செல்வதற்கு பொதுப்பாதை அமைத்து கொடுத்துள்ளேன். இதில் தனசேகரன் என்பவர் பொதுப்பாதையில் மற்றவர்கள் செல்லும் வழியில் கார் மற்றும் இருசக்கரவாகனங்களை நிறுத்தி வைக்கின்றார். இது சம்பந்தமாக நாங்கள் கேட்ட போது என்னையும் எனது மனைவியையும் மூத்த மகன் சந்திரசேகரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி இருவரும் சேர்ந்து கடந்த 23- ந்தேதி தேதி 2 பேரும் இரும்பு பைப்பு மற்றும் கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருக்கிறது.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மகளை காதலிப்பதாக கூறி தாயை மானபங்கம்படுத்திய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- மலரை மானபங்கபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மலர் (வயது 42). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலர் வீட்டுக்கு நேரில் சென்று அவரது மகளை காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறினார். பின்னர் மலரை மானபங்கபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மலர் கொடுத்த புகாரின் பேரில் சக்தி ஆகாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
- ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் கத்தியை எடுத்து காட்டி உள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையம் கிராமத்தை ச்சேர்ந்தவர்சஞ்சீவி (வயது 53). இவர் அதே பகுதியில்பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த அர்ஜுணன் என்பவர் வந்தார். அவர் ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்தஅர்ஜுனன் வியாபாரியை சஞ்சீவியை அசிங்கமாக திட்டி கத்தியை எடுத்து காட்டிகொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி புதுப்பேட்டை போலீசில் சஞ்சீவிகொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சப்.இன்ஸ்பெக்ட ர்செல்வம்ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து கொலைமிரட்டல் விடுத்த அர்ஜுனனை தேடிவருகின்றனர்.
- பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- இருவரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கீழிருப்புகிழக்குதெருவை சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி பானுமதி (வயது 40). இவர்களது மகன் அஜித்குமார் இவர் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் அனுசுயா என்பவரை ஒருமாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டில்இருந்தனர். நேற்றுமுன்தினம் பானுமதி வீட்டுவாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த அதேஊரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ரவி,பரத்,ஸ்ரீராம்ஆகியோர் பானுமதியை பார்த்து எங்க வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் கொ செய்யலாம் என்று கூறி உருட்டுகட்டையால் தாக்கினர்.
இதில் பானுமதி, அவரது மகன் அஜித்குமார்ஆகியோர்காயமடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசுஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து காடாம்புலியூர் போலீஸில் புகார் செய்தனர்.காடாம்புலியூர்போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர்பூவராகவன் ஆகியோர்வழக்குப்பதிவு செய்து 5பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக் கூடல் ஆண்டிக்கரையை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 52). இரும்பு கம்பி மொத்த வியாபாரி. இவரது மகன் அரவிந்த் (26).
இவர் தனது தந்தை கலைவாணனிடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அதற்கு அவர் சொத்தை எழுதி தர முடியாது என மறுப்பு தெரிவித்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்த் தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் நேற்று கலைவணனின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை தீர்த்துக்கட்ட கத்தி, வெடிகுண்டுகளுடன் காரில் இருந்து இறங்கினர். அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். இதை பார்த்ததும் அரவிந்த், தனது கூட்டாளிகளுடன் காரில் தப்பி சென்று விட்டார்.
இது குறித்து கலைவாணன் கருமலைக் கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காம்பவுண்ட் சுவர் அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த காரை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். இதில் 2 பேர் மட்டும் போலீசாரின் பிடியில் சிக்கினர். அவர்கள் அரவிந்தின் கூட்டாளிகளான முருகன் (39), கோவிந்தராஜ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காருக்குள் இருந்து 3 வீச்சு அரிவாள்கள், 4 கத்தி, ஒரு குத்து கம்பி, 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடமிருந்து 7 மூட்டைகளில் போதை குட்கா பொருட்களும், அதை கடத்த பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளி தியாகு ஆகியோரை தேடி வருகிறார்கள். #tamilnews
பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 55). இவரது மகன் பிரகதீஸ்வரன்(20). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றார். நேற்று மாலை 4 மணியளவில் பிரகதீஸ்வரன் ஒட்டலில் இருக்கும் போது நத்தம் கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம்(42) என்பவர் பிரகதீஸ்வரினிடம் டிபன் கேட்டார். அதற்கு டிபன் இல்லை என அவர் கூறினார்.
இதன் காரணமாக திருவேங்கடம் பிரகதீஸ்வரனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த பிரகதீஸ்வரன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து திருவேங்கடத்தை கைது செய்தனர். #tamilnews