search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's struggle"

    • வேலூர் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு
    • வாலிபர் தாக்கியதால் மண்டை உடைந்தது

    வேலூர்:

    வேலூர் ஓல்டு டவுன், செங்காநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கும் எதிர் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இன்று காலை மோதல் ஏற்பட்டது.

    அப்போது எதிர் தரப்பை சேர்ந்த வாலிபர் பெண்ணை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பெண் வேலூர் தெற்கு போலீசில் நிலையத்திற்கு ஓடி வந்தார்.

    பெண்ணை தாக்கிய வாலிபர் அவரை பின்தொடர்ந்து போலீசில் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து வைத்துக்கொண்டனர். பெண்ணை ஆஸ்பத்திரிக்கு செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

    ஆனால் பெண் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து போலீஸ் நிலைய நுழைவாயில் அமர்ந்து தன்னை தாக்கிய வாலிபரை வெளியே அனுப்புங்கள். நானும் ரவுடிதான் என்று கூறினார்.

    மண்டையை உடைத்த அவனது மண்டையும் உடைக்க வேண்டும்.அப்போதுதான் ஆஸ்பத்திரிக்கு செல்வேன் என அடம் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் போலீசார் செய்வது அறியாது திகைத்து நின்றனர்.

    சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு வந்த பெண்ணிற்கு தெரிந்த வாலிபருடன் பைக்கில் ஏறி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றார்.

    ரத்தம் சொட்ட, சொட்ட போலீஸ் நிலையம் முன்பு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர்.
    • வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோ ட்டையைச்சேர்ந்தவர் மீனாட்சி(வயது35) இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு சில மாதங்களில் கணவன் விட்டு விலகிச் சென்றதால், சட்டரீதியாக விவாகரத்து பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து மீனாட்சியின் தாயார், மீனாட்சிக்கு 2-வது திருமணம் செய்து வைப்பதற்காக வரன் தேடினார். இதனை அறிந்த காரைக்காலை சேர்ந்த மரிய லூர்து ராஜ் என்பவர், தான் திருமணமாகாத நபர் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிஉள்ளார்.

    அதன்பின்னர் மரிய லூர்து ராஜ், மீனாட்சியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்ததார். சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர். அப்போது மீனாட்சி மரியலூர்துராஜிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய போதெல்லாம், ஏதாவது காரணம் கூறி தட்டிக் கழித்து வந்ததால், மீனாட்சி காரைக்காலில் விசாரித்தார்.

    அப்போது மரிய லூர்து ராஜ்க்கு ஏற்கனவே திருமணம் ஆன விபரம் தெரிய வந்துள்ளது. உடனே ஏமாற்றப்பட்டதை அறிந்த மீனாட்சி, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மரிய லூர்து ராஜ், புகாரை வாபஸ் வாங்கினால், திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து புகாரை மீனாட்சி வாபஸ் வாங்கியுள்ளார். மீண்டும் மீனாட்சி திருமணம் பேச்சை எடுத்தபோது, திருமணம் என்ற பேச்சை எடுத்தாலோ, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலோ, கொலை செய்து விடுவதாக, மரியலூர்துராஜ் வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    அதனை தொடர்ந்து, காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் அளிக்க சென்றார். ஆனால் புகாரை வாங்க அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தாமதப்படுத்தியதால், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மீனாட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்தப்பெண்ணை சமரசம் செய்த போலீசார், மீனாட்சியின் புகாரை பெற்றனர். புகாரில், மீனாட்சி, மரிலூர்துராஜ் பழகிய புகைப்படம், வீடியோ, வாட்ஸ் அப் கால் பதிவுகள், துப்பாக்கி காட்டி மிரட்டும் படம் போன்றவற்றை ஒப்படைத்துள்ளார்.

    ஆவல்நத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான குளத்தில் கரம்பை மண் அள்ளாமல் முறையாக அள்ள வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி குளத்துக்குள் இறங்கி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவல்நத்தம் ஊராட்சியில் ஆவல்நத்தம், நாரணபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் ஆவல்நத்தம் கிராம மக்கள் அங்குள்ள குளத்துக்குள் இறங்கி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆவல்நத்தம் பகுதி மக்களுக்கு மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சீராக குடிநீர் வழங்க வேண்டும். ஆவல்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய நிதி ரூ.1 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்கு கைப்பம்பு உடனடியாக அமைக்க வேண்டும். பழுதடைந்த குழாயை செப்பனிட வேண்டும்.

    ஆவல்நத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான குளத்தில் ஒரே இடத்தில் கரம்பை மண் அள்ளாமல் முறையாக அள்ள வேண்டும். குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் குளத்துக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கரம்பை மண் அள்ளும் பணியை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.

    இது குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து வட்டாட்சியர் பரமசிவன் சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கைப்பம்பு இரு தினங்களில் அமைக்கப்படும். குளத்தில் கரம்பை மண் அள்ளுவதை முறையாக கண்காணித்து சமப்படுத்தப்படும் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
    மன்னார்குடி அருகே பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
    மன்னார்குடி:

    தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து 274 இடங்களில் 3500 அடி முதல் 6 ஆயிரம் அடிவரை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 274 கிணறுகள் தோண்டப்பட உள்ளது.

    தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் முதல் வட்டாரத்திற்கு மரக்காணம் முதல் கடலூர் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க பரிசோதனை செய்ய உள்ளது. கடந்த 12-ந்தேதி இரண்டாவது வட்டாரத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த 2-வது வட்டாரம் என்பது நாகை மாவட்டத்தின் ஆழ்கடல் இல்லாத கரையோர கடல் பகுதியாகும். இந்த பகுதியில் 158 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.

    இந்த திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து குடிநீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 274 இடங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் தமிழ்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் தலைமையில் காவிரி படுகை மண்டல கூட்டம் நடந்தது. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ள இடங்களின் பட்டியலில் முதலில் உள்ள இடம் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், திருக்களார் ஊராட்சி ஆகும்.

    இங்கு கடந்த 14-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில் அடுத்த மாதம் (ஜூன்) கடைசி வாரத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல் கட்டமாக கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் உள்பட பலர் திருக்களாரில் ஒன்று திரண்டனர். அப்போது பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் நான்காம் சேத்தி கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியமும் கலந்து கொண்டார்.

    திருக்களாரில் இன்று போராட்டம் தொடங்கி விட்டது. நெடுவாசல் போல வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டங்களை வெளியேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் டெல்டா மாவட்டங்களை பாலை வனமாக்க இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இதற்கு எதிராக ஓட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம். மயிலாடுதுறையில் வருகிற 19-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெரியபாளையம் அருகே ரத்த பரிசோதனை மையத்தில் ஊழியர் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் கோவில் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

    இங்கு ‘போஜன் அபியான்’ திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ரத்த சோகை பரிசோதனை செய்யப்படும் என்று அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆலப்பாக்கம், அத்திவாக்கம், ஆமிதா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    ஆனால், ரத்த பரிசோதனை செய்யும் ஊழியர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் மதியம் வரை காத்திருந்த பெண்கள் பணியில் இருந்த டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பரிசோதனை சிறப்பு முகாமுக்கு எங்களை வர சொல்லி விட்டு டெக்னீசயனை ஏன்? பயிற்சி வகுப்புக்கு அனுப்பினீர்கள் என்று சரமாரியாக கேள்வி கேட்டனர்.

    இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் செய்தனர்.

    பின்னர் யானம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ரத்த பரிசோதனை செய்யும் டெக்னீசயன் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யும் பணி நடந்தது.
    திருவாரூர் அருகே கருகும் சம்பா பயிருக்கு தண்ணீர் விட கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஆறுகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் பாசனம் கிடைக்காமல் சம்பா இளம் பயிர்கள் கருகி வருகின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பா இளம் பயிர்களை காப்பாற்றிட ஆறுகளில் போதிய தண்ணீர் முறை வைக்காமல் திறக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே உள்ள மாவூர், திருக்காரவாசல், பாலையூர், குன்னியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கருகும் சம்பா பயிர்களை காப்பாற்றிட முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் அருகே உள்ள மாவூர் கடைவீதியில் தி.மு.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவா தலைமை தாங்கினார்.

    போராட்டத்தின்போது கருகும் பயிரை காப்பாற்றிட வெள்ளையாறு மற்றும் பாண்டவையாறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது விவசாயி ஒருவர் இறந்தது போன்று சாலையில் படுக்க வைத்து பெண்கள் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    3 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு உளுந்தூர்பேட்டையில் உள்ள 2 பெரிய ஏரிகளில் இருந்தும், மட்டிகை கிராமத்தில் ராட்‌ஷத போர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பிரகாஷ் நகர் பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதகாலமாக சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. குடிநீர் கிடைக்காததால் பொது மக்கள் அவதியடைந்தனர். குடிநீர் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்களும் கொடுத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் நகர் பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு, கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் பேரூராட்சி அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, விரைவில் உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #Tamilnews
    ×