search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvarur protest"

    வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க தவறிய பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கொட்டும் மழையில் 8 கிராம விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பழவனக்குடி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் வரவில்லை. இதற்கு வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறாததே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

    இதனால் பழவனக்குடி, கொச்சக்குடி, மருத பட்டினம், அடிப்புளிச்சேரி, கூத்தம் பாடி, கேக்கரை உள்ளிட்ட 8 கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் தண்ணீரின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

    எனவே வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க தவறிய பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து இன்று காலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 8 கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருவாரூர் -நாகப்பட்டினம் இடையே 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையிலும் விவசாயிகள் தண்ணீருக்காக மறியல் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவாரூர் அருகே கருகும் சம்பா பயிருக்கு தண்ணீர் விட கோரி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஆறுகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் பாசனம் கிடைக்காமல் சம்பா இளம் பயிர்கள் கருகி வருகின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பா இளம் பயிர்களை காப்பாற்றிட ஆறுகளில் போதிய தண்ணீர் முறை வைக்காமல் திறக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே உள்ள மாவூர், திருக்காரவாசல், பாலையூர், குன்னியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கருகும் சம்பா பயிர்களை காப்பாற்றிட முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் அருகே உள்ள மாவூர் கடைவீதியில் தி.மு.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவா தலைமை தாங்கினார்.

    போராட்டத்தின்போது கருகும் பயிரை காப்பாற்றிட வெள்ளையாறு மற்றும் பாண்டவையாறுகளில் முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது விவசாயி ஒருவர் இறந்தது போன்று சாலையில் படுக்க வைத்து பெண்கள் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×