search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணத்தை மறைத்து பழகிய வாலிபர்: போலீஸ் நிலையம்  முன்பு பெண் தர்ணா போராட்டம்
    X

     போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் செய்த இளம்பெண்ணை படத்தில் காணலாம். 

    திருமணத்தை மறைத்து பழகிய வாலிபர்: போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டம்

    • 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர்.
    • வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோ ட்டையைச்சேர்ந்தவர் மீனாட்சி(வயது35) இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு சில மாதங்களில் கணவன் விட்டு விலகிச் சென்றதால், சட்டரீதியாக விவாகரத்து பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து மீனாட்சியின் தாயார், மீனாட்சிக்கு 2-வது திருமணம் செய்து வைப்பதற்காக வரன் தேடினார். இதனை அறிந்த காரைக்காலை சேர்ந்த மரிய லூர்து ராஜ் என்பவர், தான் திருமணமாகாத நபர் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிஉள்ளார்.

    அதன்பின்னர் மரிய லூர்து ராஜ், மீனாட்சியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்ததார். சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர். அப்போது மீனாட்சி மரியலூர்துராஜிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய போதெல்லாம், ஏதாவது காரணம் கூறி தட்டிக் கழித்து வந்ததால், மீனாட்சி காரைக்காலில் விசாரித்தார்.

    அப்போது மரிய லூர்து ராஜ்க்கு ஏற்கனவே திருமணம் ஆன விபரம் தெரிய வந்துள்ளது. உடனே ஏமாற்றப்பட்டதை அறிந்த மீனாட்சி, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மரிய லூர்து ராஜ், புகாரை வாபஸ் வாங்கினால், திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து புகாரை மீனாட்சி வாபஸ் வாங்கியுள்ளார். மீண்டும் மீனாட்சி திருமணம் பேச்சை எடுத்தபோது, திருமணம் என்ற பேச்சை எடுத்தாலோ, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலோ, கொலை செய்து விடுவதாக, மரியலூர்துராஜ் வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    அதனை தொடர்ந்து, காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் அளிக்க சென்றார். ஆனால் புகாரை வாங்க அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தாமதப்படுத்தியதால், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மீனாட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்தப்பெண்ணை சமரசம் செய்த போலீசார், மீனாட்சியின் புகாரை பெற்றனர். புகாரில், மீனாட்சி, மரிலூர்துராஜ் பழகிய புகைப்படம், வீடியோ, வாட்ஸ் அப் கால் பதிவுகள், துப்பாக்கி காட்டி மிரட்டும் படம் போன்றவற்றை ஒப்படைத்துள்ளார்.

    Next Story
    ×