கடலூரில் இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு

சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலூரில்  இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது தங்கை பிறந்தநாளுக்கு சூர்யா என்பவர் தனது நண்பர்களுடன் வாழ்த்து கூற வந்தார். அப்போது சதீஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து எதற்காக வாழ்த்து கூற வந்தீர்கள்? என்று கூறி சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் சதீஷ் உட்பட 3 பேரும், சபரி ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com