என் மலர்
நீங்கள் தேடியது "கவுதம் கம்பீர்"
- சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள்.
- சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி இதுவாகும்.
கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். தோல்விக்கு அவர் கூறிய விளக்கமும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் தற்போதைக்கு கம்பீரை நீக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவிடம் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கம்பீர் உணர்ச்சிவசப்படும் நபர் என்பதால் அவர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு நல்லதல்ல என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியின் தோல்வி தர்மசங்கடமானதும், கடினமானதுமானது. தலைமையைப் பொறுத்தவரை கவுதம் கம்பீர் எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிவேன். அவர் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். இத்தகைய நபர் ஓய்வறையில், அதுவும் பயிற்சியாளராக இருப்பது நல்ல விஷயமல்ல.
இப்படிக் கூறும்போது, திரைக்குப் பின்னால் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று சொல்வதாக ஆகாது. சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். கம்பீருக்கு பயிற்சியாளராகும் அனுபவம் உள்ளது.
கம்பீர் குறித்த கேள்வி கடினமானது. தென் ஆப்பிரிக்க அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதைய பயிற்சியாளரான சுக்ரியுடன் நான் பணியாற்றியதில்லை. காம்பீர், ரியான் டென் டஸ்கேட், மோர்னே மோர்கெல் ஆகியோருடன் இந்திய ஓய்வறையில் நான் இருந்ததில்லை. வெளியில் பார்க்க இது ஒரு வலுவான கூட்டணி போல் தெரிகிறது.
ஆனால் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள்? ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளர் என்பவர் வெவ்வேறு விதமாகவே தெரிப்பார். முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் தலைமையின் கீழ் நான் விளையாட விரும்புவேன். அவரும் கம்பீர் போலத்தான். முன்னாள் வீரர்களின் அனுபவம் நமக்கு உதவும், சில வீரர்கள் அதனால் சவுகரியமாக உணர்வார்கள். அது அவர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும். ஆனால் மற்ற சிலருக்கு அது உத்வேகமாக இருக்காது. எப்படியிருந்தாலும் உணர்ச்சிவசப்படும் நபர் பயிற்சியாளராக இருப்பது நல்லதல்ல" என்று கூறினார்.
- மோசமான தோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
- தனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மோசமான தோல்வியாகும்.
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. தென்ஆப்பிரிக்கா 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இந்த மோசமான தோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். தனது எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என்று நேற்றைய போட்டிக்கு பிறகு அவர் தெரிவித்தார். இதனால் கம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வி.வி.எஸ். லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் இப்போதைக்கு நீக்கம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
இப்போதைய சூழ்நிலையில் கம்பீருக்கு மாற்றாக வேறு யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை. அவர் அணியை மறுசீரமைப்பு செய்தவர். கம்பீரின் ஒப்பந்தம் 2027 உலக கோப்பை வரை இருக்கிறது.
தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் டெஸ்ட் அணி தேர்வு குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
- ஒரு வருடத்தில் 2-வது முறையாக இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் 0-2 என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழா நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் அதில் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் கம்பீர் டவுன் டவுன் என கோஷமிட்டனர். அதனை கம்பீர் கண்டுகொள்ளவில்லை.
இதனை பார்த்த இந்திய வீரர் சிராஜ் அப்படியெல்லாம் கோஷமிட வேண்டாம் என்பது போல வாயில் விரல் வைத்து சைகை காட்டினார். தொடர்ந்து அனைவரையும் அமைதி காக்கவும் அவர் வேண்டி கொண்டார். இதில் ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்ததுள்ளது.
- சொந்த மண்ணில் இந்திய அணி 2-வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்ததுள்ளது.
அதேசமயம் சொந்த மண்ணில் இந்திய அணி 2-வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு கம்பீர் கூறியதாவது:-
இதை முடிவு செய்ய வேண்டியது பிசிசிஐ தான். நான் முன்பே சொன்னேன். இந்திய கிரிக்கெட் முக்கியம். நான் முக்கியமில்லை. இங்கிலாந்து மண்ணில் டெஸ்டில் நன்றாக விளையாடியபோதும், சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையை வென்றபோது இதே கம்பீர்தான் பயிற்சியாளராக இருந்தேன். இது கற்றுக்கொண்டிருக்கும் ஒரு அணி என கூறினார்.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
- நீங்கள் ஒரு தனி நபரை மட்டும் குறை சொல்ல முடியாது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேசமயம் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக இந்திய அணி ஹோமில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சறுக்கல்கள் எற்பட்டுள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளார் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த காலங்களிலும் இதுபோன்ற சறுக்கல்கள் எற்பட்டுள்ளன. ஆனால் யாராவது ஒருவர் நான் இதை தடுத்தாக வேண்டும் என்று விளையாட வேண்டும். அது இம்முறை நடக்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்த அணி வேறு. அனுபவம் வாய்ந்தது. இந்த அணி வேறு. நீங்கள் ஒப்பிட முடியாது. அவர்களுக்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும்.
நான் அனைவரிடமிருந்தும் இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறேன். நீங்கள் ஒரு தனி நபரை மட்டும் குறை சொல்ல முடியாது என கம்பீர் கூறினார்.
- முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கவுகாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
- கவுதம் கம்பீர் தலைமயில் இந்திய மண்ணில் இந்திய டெஸ்ட் அணி மோசமாக விளையாடி வருகிறது.
- 6 போட்டிகளில் நான்கில் தோல்வியை சந்தித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு ஆடுகளம் மிகவும் மோசமான அமைக்கப்பட்டதுதான் காரணம் என விமர்சனம் எழுந்தது. மேலும், இவ்வாறுதான் ஆடுகளம் அமைக்க வேண்டும் என்ற கம்பீர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக இருந்தே தண்ணீர் தெளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கம்பீர் ஆடுகளம் குறித்து குறை கூறவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கம்பீர் தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 0-3 எனத் தோல்வியடைந்துள்ளது. தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 6 போட்டிகளில் 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்பட வேண்டுமா? என கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கங்குலி "தற்போதைய நிலையில் கவுதம் கம்பீரை நீக்குவதற்கான கேள்வி இல்லை. இங்கிலாந்தில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அதேபோல் இந்தாவிலும் சிறப்பாக விளையாடும் என் முழு நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.
- ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடுவது நல்லது.
- பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலையிடக்கூடாது.
கொல்கத்தா, நவ.18-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை எடுக்க முடி யாமல் 93 ரன்னில் சுருண்டு படு தோல்வி அடைந்தது.இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந் தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.
தொடக்க நாளில் இருந்தே கொல்கத்தா ஆடு களம் (பிட்ச்) சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந் தது. இது மாதிரியான பிட்சை அமைக்குமாறு ஆடு கள பராமரிப்பாளரிடம் பயிற்சியாளர் காம்பீர் கேட் டுள்ளார். இதனால் தான் இந்திய அணி 4 சுழற்பந்து வீரர்களுடன் களம் இறங் கியது. அதே நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்க ளாலும் இந்த ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆட முடிய வில்லை. இதனால் காம்பீர் கடும் விமர்சனத்தை சந்தித் துள்ளார்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, முன்னாள் வீரர்கள் புஜாரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆடுகளம் தொடர்பாக காம்பீரை சாடி இருந்தனர்.
இந்த நிலையில் முன் னாள் கேப்டனும், டெலிவி சன் வர்ணனையாளருமான கவாஸ்கரும் இது தொடர் பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளனர். ஆடுகளத் தின் தன்மை தொடர்பாக தலையிடக்கூடாது என்று அவர் காம்பீரை அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது:-
ஆடுகள பராமரிப்பாள ரை நீங்கள் (காம்பீர்) தனி யாக விட்டு விட வேண்டும். பிட்ச் நிலைமைகளை உத்தர விட முயற்சிக்கக் கூடாது. அது சில நேரங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தும். ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடு வது நல்லது. ஏனென்றால் அவர் மற்றவர்களை விட தனது வேலையை பற்றி நன்கு அறிவார்.
பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலை யிடக்கூடாது. இதனால் ஏற் படும் விளைவுகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- நாங்கள் எதிர்பார்த்த ஆடுகளம் இதுதான்.
- நான் முன்னதாக சொன்னதுபோன்று, ஆடுகள பராமரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நான்கு இன்னிங்சிலும் பவுமா மட்டுமே அரைசதம் அடித்தார். இந்தியா முதல் இன்னிங்சில் அடித்த 189 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
முதல் நாளில் இருந்து ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் சாதமாக இருந்தது. அதிக அளவில் டர்ன் ஆனது. பந்து பிட்ச் ஆன சில பகுதிகளில் பள்ளம் ஏற்படுவபோன்று, மேற்பகுதி சேதமாகியது. இதனால் மோசமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் கவுதம் கம்பீர் ஆடுகளம் குறித்து கூறுகையில் "ஆடுகளம் அவ்வளவு மோசமான வகையில் சேதமடையவில்லை. நாங்கள் எதிர்பார்த்த ஆடுகளம் இதுதான். நான் முன்னதாக சொன்னதுபோன்று, ஆடுகள பராமரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார். நாங்கள் என்ன விரும்பினோமோ, அது கிடைத்தது. நன்றாக விளையாடாதபோது, இதுதான் நடக்கும்" என்றார்.
- ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது மிகவும் அவசியம்.
- கடந்த காலங்களில் பந்துவீச 6 பேர் மட்டுமே இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடரும் அதன்பிறகு ஒருநாள், டி20 தொடரும் நடக்கவுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பேட்டிங் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஆக்ரோஷமான அணியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பது மிகவும் அவசியம். கடந்த காலங்களில் பந்துவீச 6 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போதைய இந்திய அணியில் அதற்கும் மேல் உள்ளனர்.
ஆசிய கோப்பையில் பும்ராவை முதல் 3 ஓவர்கள் வீச செய்தது நல்ல பலன் தந்ததால், பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஆக்ரோஷமான அணியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம் என கூறினார்.
- பயிற்சியின்போது ரோகித் சர்மாவிடம் பயிற்சியாளர் காம்பீர் தனியாக நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார்.
- அணியில் ரோகித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து கம்பீர் விவரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பெர்த்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் போட்டி பெர்த்தில் நாளை மறுநாள் நடக்கிறது.
டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடுவேன் என்று தெரிவித்திருந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரது கேப்டன் பதவி சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து அணியில் ஒரு வீரராக ரோகித்சர்மா களம் இறங்குகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பயிற்சியின்போது ரோகித் சர்மாவிடம் பயிற்சியாளர் காம்பீர் தனியாக நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். அப்போது இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இதில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? சுப்மன் கில் எதற்காக கேப்டனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் காம்பீர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அணியில் ரோகித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து கம்பீர் விவரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா, கோலியின் பங்களிப்பு இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணிக்கு மிகவும் முக்கியம் என்றும் இதனால் எந்த ஒரு சுமையும் இன்றி சுதந்திரமாக விளையாடும்படியும் ரோகித் சர்மாவிடம் காம்பீர் தெரிவித்துள்ளார். புதிய கேப்டனான சுப்மன் கில்லுக்கு கிரிக்கெட் நுணுக்கங்கள் மற்றும் கேப்டன்ஷிப் எப்படி செய்ய வேண்டும் என்று களத்தில் வழிநடத்த வேண்டும் என்றும் கம்பீர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
- உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன.
- ஆஸ்திரேலிய தொடருக்கு ரோகித், விராட் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.
இதனால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன் என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகக் கோப்பைக்கு இரண்டரை ஆண்டுகள் உள்ளன. நாம் இப்போதைக்கு எது முக்கியம் என்பதை யோசிக்க வேண்டும். இந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறேன்.
என கம்பீர் கூறினார்.






