என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SP Velumani"

    • தி.மு.க.விற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.
    • மின் கட்டண உயர்வை நினைத்தாலே தி.மு.க.விற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி .வேலுமணி பங்கேற்று பேசியதாவது:-

    எஸ்.ஐ.ஆர். என்று அறிவித்ததுமே தி.மு.க.வினர் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆர்ப்பாட்டம் என ஆரம்பித்து விட்டார்கள். அ.தி.மு.க.வை பொறுத்த அளவில் என்றைக்குமே நேர்மையாக தேர்தலை சந்திப்போம். கள்ள ஓட்டு போடுவதெல்லாம் இருக்காது. அ.தி.மு.க.வுக்கு சாதகமான வாக்குகள், பொதுமக்கள் வாக்குகள் சரியான முறையில் சேர்க்க வேண்டும்.

    தி.மு.க.விற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். தமிழ்நாடு முழுவதுமே தி.மு.க. ஆட்சி போய்விடவேண்டும். அ.தி.மு.க., ஆட்சி வரவேண்டும் என ஒட்டுமொத்த குரலாக உள்ளது.

    இந்த முறை திருப்பூரில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சர்வே வைத்துள்ளேன். தி.மு.க. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

    மின் கட்டண உயர்வை நினைத்தாலே தி.மு.க.விற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தி.மு.க.விற்கு எப்பவும் ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் கூட இந்த ஆட்சி வேண்டாம் என கூறுகிறார்கள். எனவே அ.தி.மு.க. அரசு அமைவது உறுதி. இதுவரையிலும் தி.மு.க. ஆட்சிக்கு இவ்வளவு கெட்ட பெயர் வந்ததில்லை. அவ்வளவு கெட்ட பெயருடன் தி.மு.க. ஆட்சி உள்ளது.

    ஒரு முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மறுமுறை நிச்சயம் மிக படுதோல்வி அடையும் என்பதுதான் சரித்திரம் என்றார்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 15ந்தேதிக்குள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என தெரிவித்துள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.

    • ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி.
    • அதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்.

    சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என்ற வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

    • எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
    • புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எம்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    டெண்டர் முறைகேடு குறித்து கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதிக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதித்ததாக விஜிலெசன்ஸ் தெரிவித்துள்ளது.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    மேலும், அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு கால தாமதம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.
    • மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.

    மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பான விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

    கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா வீடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை.

    மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.

    அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு.

    கொள்கையை ஒருபோதும் இபிஎஸ் விட்டுக் கொடுக்க மாட்டார்" என்றார்.

    • கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
    • இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத்திற்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.

    ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்து முன்னணி நடத்திய மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள்அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அண்ணா, பெரியாரை விமர்சிக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • எங்களது நபர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள்.
    • நாங்கள் சொல்லும் பணத்தை நீங்கள் வைத்து விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

    கோவை:

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி.

    இவர் குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இவரது வீட்டிற்கு காளப்பட்டி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரித்து பார்த்தார். அதனை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த கடிதத்தில், ஜூலை 30-ந் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிப்பு நடத்த உள்ளோம். நாங்கள் உங்களை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

    எங்களது நபர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒரு பையில் வைத்து, 25-ந் தேதி 2 மணி முதல் 2.30 மணிக்குள் காளப்பட்டி-வெள்ளானைப்பட்டி ரோடு கலியபெருமாள் குட்டை அருகே உள்ள குப்பை மேட்டில் வைக்க வேண்டும்.

    நாங்கள் சொல்லும் பணத்தை நீங்கள் வைத்து விட்டால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி இல்லையென்றால், 3 மாதத்துக்குள் உங்களையும், உங்கள் குடும்பத்தில் 3 பேரையும் கொல்வோம். இது வெறும் குறுஞ்செய்தி அல்ல. எச்சரிக்கை எனவும் கூறப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் அ.தி.மு.க வக்கீல் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் இன்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரில், எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது.

    எனவே முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜூலை 30-ந்தேதிக்கள் கோவையில் குண்டுவெடிக்கும், எஸ்.பி.வேலுமணியை கொலை செய்வோம்.
    • காளப்பட்டி கலியபெருமாள் குட்டை குப்பை மேட்டில் ரூ.1 கோடி பணப்பையை வைக்க வேண்டும்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் ரூ. 1 கோடி கேட்டு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்தில்,

    * ஜூலை 30-ந்தேதிக்குள் கோவையில் குண்டுவெடிக்கும், எஸ்.பி.வேலுமணியை கொலை செய்வோம்.

    * காளப்பட்டி கலியபெருமாள் குட்டை குப்பை மேட்டில் ரூ.1 கோடி பணப்பையை வைக்க வேண்டும்.

    * இமெயில் ஐ.டி.யில் ஒரு ரகசிய குறியீடு வரும், அந்த குறியீட்டை பகிர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கடிதத்தின் பின்பக்கம் கூகுள் மேப் வரைபடம், drop the bad hear என்று எழுதப்பட்டுள்ளது.

    • எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
    • ரஜினிகாந்தால் திருமணத்தை நேரில் சென்று பங்கேற்க முடியவில்லை.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

    நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார். ஆனால் படப்பிடிப்பு பணிகளில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திவிட்டதால் ரஜினிகாந்தால் திருமணத்தை நேரில் சென்று பங்கேற்க முடியவில்லை.

    அதனால் படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் இன்று எஸ்.பி. வேலுமணி வீட்டிற்கு சென்று மணமக்களை வாழ்த்தி அவருக்கு மிகவும் பிடித்தமான ஸ்ரீ ராகவேந்திரா அவர்களுடைய உருவ படத்தை பரிசாக வழங்கினார். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
    • அவருக்கு எதிராக அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள் ஐகோர்ட்டில் நடந்தன.

    சென்னை:

    சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், ஐகோர்ட்டில் நடந்து வந்தன.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், "ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை" எனவும் முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், வழக்கு பதிய அனுமதி பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

    இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானதாகவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்பகட்டம் என்றும், ஆரம்பகட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.

    இந்த வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் மாதம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்கு நவம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும், கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதையடுத்து டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

    • எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர்.

    சென்னை :

    சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த பணிகளை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் அ.தி.மு.க. முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பெரும் ஊழல் செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் புகார் செய்தனர்.

    அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டிலும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ், எஸ்.பி.வேலுமணி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே, வக்கீல் ஜெ.கருப்பையாஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    இந்தநிலையில், அந்தத் தீர்ப்பு, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு வழங்கப்படும் என ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.

    • வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம்.
    • ஆட்சிமாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான 48 பக்க தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

    டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. முறைகேடு நடந்ததாக நேரடியாக வழக்கு பதியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் தவறால் அல்லாமல் வேலுமணி செல்வாக்கால் முறைகேடு நடந்ததாக நிரூபித்திருந்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க மாட்டாது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? 

    அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீட்டில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்.

    தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதால் ரத்து செய்ய முடியாது, என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தொண்டாமுத்தூர் ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேச்சு.
    • 19 மாதங்கள் ஆகிவிட்டது.

    வடவள்ளி

    சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற வில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கும், கோவை மாவட்டத்திற்கும், தமிழக த்துக்கும் எதுவும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. தற்போது அமைச்சராகி உள்ள உதயநிதி ஸ்டாலின் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைக்கிறார்.

    அ.தி.மு.க. அரசு கட்டிய பாலங்களில் தி.மு.க. போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் தி.மு.க. அரசோ சொத்து வரி, மின் கட்டண உயர்வால் மக்களை வாட்டி வதைக்கிறது.

    குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 கொடுப்பதாக சொன்னார்கள். 19 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அந்த திட்டம் பற்றி பேச்சே இல்லை.

    இங்கு இருக்கும் காவல்துறை என் கட்சி காரர்கள் மீது பொய் வழக்கு பதிய வேண்டாம். நடுநிலையாக செயல்படுங்கள். தமிழகத்தில் கஞ்சா அதிக அளவில் விற்பனை நடைப்பெறுகிறது.

    அ.தி.மு.க. போராட்டம் அறிவித்த பிறகே, பொங்கல் பரிசாக கரும்பு கொடுக்கிறார்கள். தி.மு.க.விற்கு வாக்கு அளித்தவர்கள் எதற்கு வாக்களித்தோம் என்று வேதனைப்படுகின்றனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 இடங்களையும் வெல்வோம். சட்டமன்றதேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

    ×