என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக பாஜக கூட்டணி"
- தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.
- ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல்.
ஜி.எஸ்.டி., வரி நீக்கம் மற்றும் குறைப்பு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக., சார்பில் அரிசி கடை வீதி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தையும், தமிழையும் மோடி என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் பெருமளவு விலை குறைந்துள்ளது. மத்திய அரசு நிதி வழங்காமல் வஞ்சனை செய்கிறது என தி.மு.க. அரசு குற்றச்சாட்டு தெரிவிக்கிறது. ஆனால் வரி பகிர்வு 50 சதவிகிதம் வழங்கப்பட்ட பின்னரும் மத்திய அரசின் பகிர்வில் இருந்து மேலும் 41 சதவீதத்தை வழங்குகிறது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.
டாஸ்மாக் நடத்தி குடும்பங்களை சீரழித்து வருகின்றனர். மேலும் 10 ரூபாய் பாலாஜி வாங்கும் 10 ரூபாயையும் சேர்த்துக் கொள்கின்றனர். வரி வசூலிக்கும் முறையை சீரமைத்ததால் 13 சதவீதம் தமிழக வரி வருவாய் உயர்ந்துள்ளது. எத்தனை வரி வருவாய் கொடுத்தாலும் நாம் வாழ்வது குப்பைக்கு மத்தியில் தான். கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வேலை செய்வதே கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி 2026ல் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும்.
மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். 200 தொகுதி அல்ல 2 தொகுதி கூட ஜெயிக்க முடியாது. தமிழக மக்கள் உங்கள் வேஷத்தை பார்த்து வருகின்றனர். கரூரில் மக்கள் துயரத்தை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. திட்டமிடப்பட்டு கலவரம் செய்ய ஏதோ நடைபெற்று உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. தோட்டத்து விவசாயிகள் அச்சத்தில் வாழ வேண்டிய நிலை உள்ளது.
பெண்கள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க., ஜெயிக்க கூடாது. குப்பை முதல் அனைத்திலும் ஊழல். மின் கட்டணம் கட்ட முடியாமல் சிறு நிறுவனங்கள் தவித்து வருகின்றனர்.
திராவிட மாடல் என்பது மக்கள் நல அரசு அல்ல, மோடியை எதிர்த்து பேச வேண்டும் என்பதே., பா.ஜ.க., அ.தி.மு.க., கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. உங்களை வீட்டுக்கு அனுப்ப ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இது. ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கட்சி கிடையாது. அடிமட்ட தொண்டர் கூட மேடைக்கு வர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
- ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு.
திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த, ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்த கூட்டத்தில், தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது.
- இபிஎஸ்-க்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டசி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவை பாஜகவை விழுங்கி சரித்துவிடும் என்று திரும்ப திரும்ப விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புணர்வோடு சுட்டிக் காட்டியது. கவலையோடு சுட்டிக்காட்டியது.
அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு சுட்டிக்காட்டியது.
ஆனால், அதை அப்படியே திருப்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
அவருக்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அவராகவே இந்த கருத்தை சொல்கிறார் என்று என்னால் ஏற்க முடியவில்லை.
அதிமுகவிற்கு எதிராக பேசுவதாக அவர் கருதுகிறார் என்று நினைக்கிறேன். அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்று அவர்கள் புரிந்துக்கொள்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் உணருவார்.
ஆனால், சேராத இடத்தில் சேர்ந்திருக்கின்ற சூழலில் அவர் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று நான் கருதுகிறேன். அப்படி பேசினால் வருத்தப்படுவதற்கும் எதுவுமில்லை.
2021ம் ஆண்டில் இருந்து ஓரிரு பொதுத்தேர்தலைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் தான் விசிக பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து இன்று ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது. அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
விசிக வளர்ச்சி அடைந்திருக்கிறதே தவிர.. வீழ்ச்சி அடையவில்லை. ஆகவே அவர், திரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாஜகவுடன் கூட்டணி என்பதை முதல்வருக்கு பொறுக்க முடியவில்லை.
- 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்.
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் 126 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுகு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
இந்த கூட்டத்தை பார்த்தால் இது பொதுக்கூட்டம் அல்ல. அதிமுகவின் மாநாடு போல் உள்ளது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி.
அதிமுக இதோடு முடிந்து விட்டது என கூறி பகல் கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும்.
பாஜகவுடன் கூட்டணி என்பதை பொறுக்க முடியவில்லை முதல்வர் ஸ்டாலினுக்கு. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை.
ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. வாக்குகள் சிதறாமல் இருக்க, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே கூட்டணி வைத்துள்ளோம். எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது.
கல்விக்கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை, சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணம், குடிநீர் வரி, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி என அனைத்தும் உயர்ந்துவிட்டது.
இளைஞர்கள் அதிமுகவிற்கு வலுசேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.
- மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பான விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா வீடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை.
மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.
அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு.
கொள்கையை ஒருபோதும் இபிஎஸ் விட்டுக் கொடுக்க மாட்டார்" என்றார்.
- தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு.
- தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த மோடியை பாராட்டதது ஏன்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களால் தமிழ்நாடு மலிந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வருக்கு இதைப் பற்றி எந்த அக்கறையோ, கவலையோ கிடையாது.
2024-ல் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம். மஹாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
2025ல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்து, 27 ஆண்டுக்குப் பிறகு பாஜக ஆட்சி. டெல்லி போல 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும்.
திமுக ஆட்சியில் எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஊழல் மயமாகிவிட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு கொடுக்கும் பணத்தை திமுக அரசு மக்களுக்கு கிடைக்காமல் செய்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு.
தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. தென் தமிழகத்திற்கு எதையுமே செய்யாமல் திமுக அரசு துரோகம் செய்கிறது.
முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது.
தமிழ், தமிழ் எனக்கூறும் திமுக அரசு உயர்கல்வியை தமிழ் வழியில் கொண்டு சேர்க்காதது ஏன்?
தமிழகத்தின் பெருமை கூறும் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்த மோடியை பாராட்டதது ஏன்?
திமுக ஆட்சியை எப்படி அகற்றப்போகிறோம் என்ற சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- சட்டமன்றத்தில் அதிமுக - திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
- நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பாக இன்று கூடிய சட்டமன்றத்தில் அதிமுக - திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதை நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நிச்சயம் அதனை செய்திருப்போம்.
ஆனால், இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே. 'நீட் தேர்வை ரத்து செய்தால் தான் (பாஜக) கூட்டணியில் இருப்போம் என்று கூற உங்களுக்கு அருகதை இருக்கிறதா? என்று இபிஎஸ்-ஐ நோக்கி கேள்வி எழுப்பினார்.
தவறை சரி செய்வதற்கு உங்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2026ஆம் ஆண்டில் என்ன, 2031ல் கூட கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது கூட்டணி அமைத்திருக்கிறீர்களே என்றும் இது ஏமாற்றுவேலையல்லவா என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
- அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி.
- இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் 23ம் தேதி விருந்து அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்திலேயே விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது.
இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்றார்.
- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.யுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்க உள்ளது. இதனை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த போது உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது. இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்றார்.
மேலும், கூட்டத்தில் திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சுக்கு பா.ஜ.க.வின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
வணக்கம், குணசேகரன் அண்ணா உங்களுக்குத்தான் இந்த பதிவு. எதுவுமே கவலைப்படவேண்டியதில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததில் பிரச்சனை என்று சொல்கிறீர்கள். பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு. குணசேகரன் அண்ணா உங்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன்.
நீங்கள் 3 முறை வெற்றி பெற்ற வார்டுக்குள் இன்றைக்கு நீங்க எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 64 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 484 வாக்கு பா.ஜ.க. வாங்குகிறது. இதுக்கு என்ன சொல்றீங்க? நீங்கள் தோற்றதுக்கும், பேசுறதுக்கும் எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சிக்கிறீர்கள். இது நல்லது இல்லைங்க அண்ணா... நீங்க தோற்றதுக்கு காரணம் பா.ஜ.க.வா? 3 முறை வெற்றி பெற்ற இடத்தில் ஏன் தோற்றீர்கள்? என்ன காரணம்? பா.ஜ.க. இல்லாததால் என்றார்.
- அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
- பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி, அதிமுகவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என சி. விஜயபாஸ்கருக்கு எழுதிய கடிதத்தில், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.
- அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களத்தில் காட்சிகள் அதிரடியாக மாறி வருகின்றன. அதில் சமீபத்தியது, அதிமுக - பாஜக கூட்டணி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சால் கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.
இது அத்தேர்தலில் தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்குமே பின்னடைவை தந்தது. இதிலிருந்து பாடம் கற்ற இவ்விரு கட்சிகள் தற்போது மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளன.
இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து தான் விலகிவிடுவேன் என்று தான் சொல்லவே இல்லை என முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை.
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் இந்த ஜெயக்குமார் நின்றதில்லை. அதிமுகதான் எனது உயிர் மூச்சு" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
- அதிமுக- பாஜக கூட்டணி மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்," அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். தமிழக பா.ஜ.க.வினர் இடையே புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும்.
அதிமுக- பாஜக கூட்டணி மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.






