என் மலர்
நீங்கள் தேடியது "அதிமுக நிர்வாகி"
- அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தார்.
- சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தனது பரப்புரை வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கிய மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமனை அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா கைத்தாங்கலாக எழுப்பி பேருந்திற்குள் அனுப்பி வைத்தார். சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.
சிறிது நேரம் பேருந்தில் ஓய்வெடுத்த சிறுணியம், உரையை முடித்து புறப்படும் போது எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வீர வாள் பரிசளித்தார். மணியம் மயங்கி விழுந்ததும், பழனிச்சாமி பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
- அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
- பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதிமுக- பாஜக கூட்டணி, அதிமுகவில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக முகமது கனி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என சி. விஜயபாஸ்கருக்கு எழுதிய கடிதத்தில், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.
- அ.தி.மு.க. நிர்வாகி பையில் இருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் யாரோ இந்த பணத்தை திருடியுள்ளனர்.
சென்னை:
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் உச்சி மாகாளி என்பவரும் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்திருந்தார்.
இவரது பையில் இருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் யாரோ இந்த பணத்தை திருடியுள்ளனர். இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசில் உச்சி மாகாளி புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






