என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு?.. அதிமுகவில் இருந்து விலகலா? - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
    X

    பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு?.. அதிமுகவில் இருந்து விலகலா? - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

    • கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.
    • அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களத்தில் காட்சிகள் அதிரடியாக மாறி வருகின்றன. அதில் சமீபத்தியது, அதிமுக - பாஜக கூட்டணி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சால் கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.

    இது அத்தேர்தலில் தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்குமே பின்னடைவை தந்தது. இதிலிருந்து பாடம் கற்ற இவ்விரு கட்சிகள் தற்போது மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளன.

    இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து தான் விலகிவிடுவேன் என்று தான் சொல்லவே இல்லை என முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார்.

    அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை.

    பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் இந்த ஜெயக்குமார் நின்றதில்லை. அதிமுகதான் எனது உயிர் மூச்சு" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×