search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confrontation"

    • தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.
    • மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி-பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    தற்போது ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.

    இந்நிலையில் பல்நாடு மாவட்டம், நரச ராவ் பேட்டை தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சதல வாடா அரவிந்த் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அப்போது 2 கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 கட்சியினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    மேலும் காயமடைந்தவர்களை மீட்டு நரசராவ் பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சோக்காடி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையும், உளவுத்துறையும் செயல் இழந்ததை காட்டுகிறது.
    • 2-வது நாளாக சோக்காடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி அருகே உள்ளது சோக்காடி கிராமம். இங்கு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்ட வருகிறது. இந்த பணிகளுக்காக கிரானைட் கற்களை லேயிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதில் இருந்து வரக்கூடிய தூசிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் படிந்துள்ளது.

    இதையடுத்து அவர்கள், கோவில் கட்டும் பணியை சுற்றிலும் துணி கட்டி பணி செய்யுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த நேரம் அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் அரசியல் கட்சி பிரமுகருக்கு ஆதரவாக 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு அந்த பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்க கூடிய பகுதிக்கு சென்றனர். அவர்கள் கற்களை வீசி அவர்களை தாக்கினார்கள். இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதில் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

    மேலும் ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த கூரை தடுப்பிற்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் 2 தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு தரப்பினர் வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் தொடர்புடையவர்களையும், பிரச்சினைக்கு காரணமானவர்களையும் கைது செய்யக் கோரி பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை. இதனால் சமரச தீர்வு எட்டப்படவில்லை.

    இதையடுத்து சோக்காடியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழரசி, கணேசன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே அரசியல் கட்சி பிரமுகர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் சோக்காடி-கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மாதேஷ் உள்ளிட்டோர் கல்வீச்சு நடந்த பகுதியை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், சோக்காடி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையும், உளவுத்துறையும் செயல் இழந்ததை காட்டுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசாரிடம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த தரப்பினர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது50), ஆனந்தன் (39), சித்தேவன் (44), சித்தராஜ்(53), மற்றொரு சித்தராஜ் (55) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    இதேபோன்று சித்தராஜ் தரப்பினர் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் முனிராஜ் (49), வரதராஜ் (59), குமரன் (23), சத்தியமூர்த்தி (27), செல்வம் (37), சுப்ரமணி (42) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருதரப்பினரைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்று 2-வது நாளாக சோக்காடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் காரணமாக சோக்காடி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

    • இரு தரப்பினருக்கும் இடையே வாயத்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
    • தாக்குதலில் காயமடைந்த சச்சின் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே கரையாம்புத்தூரை அடுத்த கடுவனூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்(வயது39). விவசாயி.

    சம்பவத்தன்று அப்பகுதியில் துக்க நிகழ்ச்சியின் போது அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் வானவெடி வெடித்த போது அங்குள்ள கோவிலுக்குள் புகுந்தது.

    இதனை அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் சிலர் தட்டிக்கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாயத்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு நாகராஜ் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணராஜ் குருவிநத்தத்தை சேர்ந்த கண்ணன் அவரது தம்பி அரவிந்த் மற்றும் கடுவனூரை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி நாகராஜை தாக்கினர்.

    மேலும் மோட்டார் சைக்கிள் செயின் கவரை எடுத்து கிருஷ்ணராஜ் அங்கிருந்தவர்களை தாக்க முயன்றார். அப்போது இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 16 வயது சிறுவனின் தலையில் செயின் கவரால் கிருஷ்ணராஜ் தாக்கினார்.

    மேலும் அவங்கிருந்தவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு கிருஷ்ணராஜ் மற்றும் அவருடன் வந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சச்சின் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து அருண் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர்.
    • இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

    மதுரை

    மதுைர பெத்தானி யாபுரம் மேட்டுத்தெரு கம்பர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 41) .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேச்சியம்மாள் கரிமேடு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், பூமாரி, கனி, செல்வி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர் . சரவணன் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ், பேச்சி, கோகிலா, பிரியா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    • தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா. மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும்.

    தாரமங்கலம்:

    மேச்சேரி அருகிலுள்ள தெதித்திகிரிபட்டி பகு தியைசேர்ந்தவர் சின்னு என்பவரின் மனைவி பாப்பா (வயது 45) இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் மணிகண்டன் தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்த போது கருக்குப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் எதிரே வந்த திருச்சி சமயபுரம் பகுதியைசேர்ந்த டவர் வேலை செய்யும் தொழி லாளி கிரிதரன் (26) என்ப வரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா.

    மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும். கிரி தரன் சேலம் அரசு மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி பாப்பா கொடுத்து வாக்கு மூலத்தின் படி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    மேச்சேரி அருகிலுள்ள தெதித்திகிரிபட்டி பகு தியைசேர்ந்தவர் சின்னு என்பவரின் மனைவி பாப்பா (வயது 45) இவர் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய மகன் மணிகண்டன் தார மங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ஓட்டி வந்து கொண்டிருந்த போது கருக்குப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் எதிரே வந்த திருச்சி சமயபுரம் பகுதியைசேர்ந்த டவர் வேலை செய்யும் தொழி லாளி கிரிதரன் (26) என்ப வரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் பலத்த அடிபட்டதில் பாப்பா.

    மணிகண்டன் ஆகியோர் சேலம் தனியார் மருத்துவ மனையிலும். கிரி தரன் சேலம் அரசு மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி பாப்பா கொடுத்து வாக்கு மூலத்தின் படி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாமாக உயிரிழந்தார்.

    பூதலூர்:

    உத்திரபிரதேசமாநிலம், கண்ணோஜ் மாவட்டம், காஞ்ச்பட் கிராமத்தைச் சேர்ந்த தரம்வீர் (வயது24) என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தங்கி இருந்து ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனது நண்பர் வீட்டு விசேஷத்திற்கு மோட்டர் சைக்கிள் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.

    திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி சாலையில் புதுப்பட்டி தட்டாங்குளம் அருகே சென்ற போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவருடைய சகோதரர் ஆகாஷ் பூதலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • சிகிச்சை பலனின்றி சீதையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி சீதையம்மாள் (வயது 62). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீதையம்மாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீதையம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது தங்கை பிறந்தநாளுக்கு சூர்யா என்பவர் தனது நண்பர்களுடன் வாழ்த்து கூற வந்தார். அப்போது சதீஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து எதற்காக வாழ்த்து கூற வந்தீர்கள்? என்று கூறி சூர்யா என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சபரிராஜன் என்பவரை சூர்யா உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசில் சூர்யா கொடுத்த புகாரின் பேரில் சதீஷ் உட்பட 3 பேரும், சபரி ராஜன் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா உள்ளிட்ட 3 பேர் என மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் சதிஷ் குமார் மற்றும் சிறுவன் சிவராஜ் ஆகியோர் மீது மோதியது.
    • அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் - தஞ்சாவூர் சாலையில் வடக்குபட்டு அருகே சாலையின் இடது புறமாக தாளம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 21) மற்றும் அவரது நண்பரான தாளம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த சின்னையன் மகன் சிவராஜ் (வயது 16) ஆகியோர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆவணி ஞாயிற்றுக்கி ழமையை முன்னிட்டு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த சாலையில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் சதிஷ் குமார் மற்றும் சிறுவன் சிவராஜ் ஆகியோர் மீது மோதியது. இதில்சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதில் சிறுவன் சிவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் போலீஸார் விபத்தில் பலியான சதிஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின்பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வி

    பத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கும்பகோணத்தில் இருந்து வீடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • படுகாயமடைந்த நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (50).

    இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கும்பகோணத்தில் இருந்து வீடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமும், இவரது வாகனமும் கண்ணி மைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் படுகாயம்அடைந்த நடராஜனை மீட்டு சிகிச்சை க்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இறந்து விட்டார்.

    இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம் அருகே காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா அனந்த நல்லூர் கிராமம் பிள்ளையார் கோவில தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது43). இவர் காணும் பொங்கலையொட்டி அதே தெருவில் அம்பேத்கார் இளைஞரணி சார்பில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்.

    அப்போது பக்கத்து ஊரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அங்கு வந்து மைக்கில் தேவையில்லாமல் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிவழகன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் இதுபற்றி கூறி தனது மகன் சரவணன், தனது தம்பி பெரியதுரை, அவரது மகன்கள் யோகி, சின்னத்தம்பி, சரவணன் மற்றும் 10 பேர் கும்பலுடன் அறிவழகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்த அறிவழன், அவரது மனைவி திலகவதி, தாயார் சமுத்திரம் ஆகியோரை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் அவர்களது கூரை வீட்டையும் தீ வைத்து எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால் செந்தில்குமார் தனது கும்பலுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். தாக்குதலில் காயமடைந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருதரப்பினரிடையே அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் ஆய்வுக்கு சென்ற அதிகாரியுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனை வாங்குவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வருகின்றனர்.

    இவர்களுக்கு பூக்கள் பிளாஸ்டிக் பைகளிலேயே வழங்கப்பட்டு வந்தது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் இன்று அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர்.

    பிளாஸ்டிக் பைகளில் பூக்களை வாங்கிச்சென்ற வியாபாரிகளிடம் அதனை பறிமுதல் செய்தனர். இதனால் ஆவேசமடைந்த வியாபாரிகள் எங்கு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறதோ அங்கு பறிமுதல் செய்யாமல் எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பூமார்க்கெட்டில் இருந்த பல கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர். இதனால் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன்று ஒருநாள் அவகாசம் கொடுப்பதாகவும், நாளைமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுவத்துவது தெரியவந்தால் அதனை பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

    இந்த சம்பவத்தனால் பூ மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×