மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.சிகிச்சை பலனின்றி சீதையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜன். இவரது மனைவி சீதையம்மாள் (வயது 62). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீதையம்மாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீதையம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com