என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விசாரணை"
- ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
- பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த கனகராஜ் சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்து விட்டார்.
கொடநாடு வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கனகராஜ் விபத்தில் இறந்தது குறித்து போலீசாருக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
இதில் இந்த விபத்தை நேரில் பார்த்தது சிவக்குமார் என்பது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ஞானசம்பந்தத்தின் மகன் ஆவார்.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் விபத்தை கவனித்து 108 ஆம்புலன்சுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில் இவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
அதன்படி இன்று அவர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர்.
அவரிடம் நீங்கள் விபத்தை எப்போது பார்த்தீர்கள். அந்த நேரம் நினைவிருக்கிறதா? அப்போது வேறு யாராவது அங்கு இருந்தனரா? விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியுமா? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
- மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38).
விவசாய கூலி தொழிலாளி.
இவருக்கு கயல்விழி (30) என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் வினோத்குமார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வினோத்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.என். பாளையத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 33), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் பண்ருட்டி அடுத்த வாழப்பட்டை சேர்ந்த நளினி (26) என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018-ம் நளினிக்கு நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்ற நளினி, கணவன் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலே வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது கணவர் உயிரோடு இருக்கும்போது விவாகரத்து பெறாமல் வாழப்பட்டை சேர்ந்த பாலாஜி (25) என்ற வாலிபரை நளினி 2-வது திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியன் புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரித்த மகளிர் போலீசார் நளினி, அவரது 2-வது கணவர் பாலாஜி, நளினியின் தந்தை கண்ணன், நளினியின் தாயார் லதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
- இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.
அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,
இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,
சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- யானை எப்படி இறந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் மான், கரடி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் இந்த பகுதிகளில் யானைகள் அதிகளவில் வசித்து வருகிறது. இந்த பகுதியில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறுவது வழக்கம்.
இந்நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் பர்கூர் வனப்பகுதி கோவில் நத்தம் 2-வது பீட்டுக்கு உட்பட்ட செங்குளம் வனப்பகுதிக்கு சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த யானை எப்படி இறந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பர்கூர் தேவர்மலை கால்நடை மருத்துவர்கள் பரத் மற்றும் சதாசிவம் ஆகியோரும் யானையை பிரேத பரிசோதனை செய்வதற்காக வனப்பகுதிக்கு சென்றனர்.
இதை தொடர்ந்து இன்று இறந்த கிடந்த யானை பிரேத பரிசோதனை செய்யபடுகிறது. அதன் பிறகு தான் அந்த யானை எப்படி இறந்தது என்பது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
- சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டு வருவதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 6 பேர் சிக்கினர்
இதனை அறிந்த அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றனர். அந்த கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் அந்த கும்பல் தப்பிச்சென்ற காரை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 6 பேரையும், காருடன் சேர்த்து புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் வாசுதேவநல்லூர் அருகே உள்ள உள்ளார் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செந்தமிழ்(வயது 19), கனகராஜ் மகன் சதீஷ் (20), சிவகிரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் கவிக்குமார்(21), ராமர் மகன் கனகராஜ் (22) ஆகிய 4 பேருடன் 17 வயது இளஞ்சிறார்கள் 2 பேர் என்பது தெரிய வந்தது.
அந்த கும்பல் சிவகிரி பகுதியில் செல்போன் செயலி மூலம் வாலிபர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களிடம் இருக்கும் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் பணத்தை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டியடிப்பதை இவர்கள் வாடிக்கையாக செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில், சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த கும்பலிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
- தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி ஊருக்கு மேற்கே உள்ள வழிவழி கண்மாய் பகுதியை மேல்வைப்பாறு வடிநில பிரிவு உதவி பொறியாளர் முப்பிடாதி பார்வையிட சென்றார்.
அனுமதி இன்றி மண் அள்ளினார்
அப்போது, கண்மாயில் தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் கனகராஜ் (வயது 35) என்பவர் பொக்லைன் எந்திரம் மூலமாக மண் அள்ளி, தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்த தங்கமலை ( 45) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரில் கொட்டி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.
உதவி பொறியாளர் முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து உதவி பொறியாளர் முப்பிடாதி சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தார். புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் நேரில் சென்று பார்வையிட்டு இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்தார்.
தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரையும் பொக்லைன் எந்திரத்தையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
- இன்று காலை சாம்பவர் வடகரை அருகே உள்ள தோட்டத்திற்கு ஆறுமுகத்தம்மாள் சென்றார்.
- மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாம்பவர் வடகரை:
சாம்பவர் வடகரை மேலூர் உலைக்கூட தெருவை சேர்ந்தவர் வேல். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (வயது65). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சாம்பவர் வடகரை அருகே உள்ள தோட்டத்திற்கு ஆறுமுகத்தம்மாள் சென்றார். சிறிது நேரத்தில் அவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது இளைய மகன் பாலமுருகன் (வயது 22). ஐ.டி.ஐ. படித்து விட்டு சிவகாசியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த சிவகாசி நாரணாபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
தாங்கள் காதலிப்பது குறித்து அவர்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இளம்பெண்ணின் தந்தை மகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் திருமணம் செய்து கொண்டு கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் சிவகாசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது பெண்ணின் பெற்றோர் தங்களது மகளிடம் பேச விரும்புவதாக கூறியுள்ளனர். அவர்கள் பெண்ணிடம் தனியாக பேசினர். இதையடுத்து அந்த பெண் பாலமுருகனிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதனால் அந்த பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
போலீஸ் நிலையத்திற்கு மனைவியுடன் சென்ற பாலமுருகன் தனியாக கிராமத்திற்கு வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று இரவு அங்குள்ள கன்னி மாரியம்மன் கோவில் சாமி சிலைக்கு முன்பாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாலமுருகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் திருமணம் செய்து 12 நாட்களில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.