திருவெண்ணைநல்லூர் அருகே கணவர் இறந்த 1 மாதத்தில் இளம்பெண் மாயம்

திருவெண்ணைநல்லூர் அருகே கணவர் இறந்த 1 மாதத்தில் இளம்பெண் மாயமானார்.சுகன்யாவின் தாய் சரோஜா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
திருவெண்ணைநல்லூர் அருகே கணவர் இறந்த 1 மாதத்தில் இளம்பெண் மாயம்
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே பொய்கைஅரசூர் பகுதியை சேர்ந்தவர் காந்திராஜ். இவரது மனைவி சுகன்யா. காந்திராஜ் கடந்த 30-ந் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்து இறந்தார். இந்நிலையில் சுகன்யா தனியாக 2 குழந்தைகளுடன் இருவேல் பட்டு பகுதியிலுள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று மாலை சுகன்யா வீட்டிலிருந்து வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சுகன்யாவின் தாய் சரோஜா சுகன்யாவை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் சுகன்யா கிடைக்கவில்லை. இது குறித்து சுகன்யாவின் தாய் சரோஜா திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் தெரிவி த்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சுகன்யா என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com