மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலியானார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பலியான அன்பு தர்மலிங்கம்
பலியான அன்பு தர்மலிங்கம்
Published on

சோழவந்தான்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வையத்தான் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு தர்மலிங்கம் (வயது45).இவர் சோழவந்தான் அருகே நகரி டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை தனது விவசாய தோட்டத்தில் மின்மோட்டரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான அன்பு தர்மலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பலியான டாஸ்மாக் ஊழியருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சசிதரன், ராகவி என்ற குழந்தைகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com