search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investigaton"

    • விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
    • அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது.

    மேட்டுப்பாளையம் 

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துரை, அகத்தியர் பீடம், ஊட்டி-குன்னூர் சாலை, கல்லார் காட்டேஜ் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இந்த வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானை, புள்ளிமான், சிறுத்தை, கடமான், காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடியும், தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம்.அப்படி வரும் போது விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.


    இந்த நிலையில் அகத்தியர் பீடம் அருகே 1½ வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனை அந்த பகுதியில் மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதை விசாரிப்பதற்காக வந்த தாசில்தார் மாலதி பார்த்தார். உடனடியாக அவர் சம்பவம் குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, புள்ளிமானை கைப்பற்றினர். இந்த பகுதியில் 20-க்கும் ேமற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் நாய்கள் கடித்ததில் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    இருப்பினும் நாய்கள் கடித்ததால் தான் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த பகுதியில் 3 மான்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
    • செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை

    கோவை பீளமேடு அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி கமலம் (வயது 77). சம்பவத்தன்று இவர் டெக்ஸ் பார்க் வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கமலம் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.


    இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    • மனித எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது.
    • எலும்பு கூடை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை 

    கோவை மதுக்கரை கிராம நிர்வாக அலுவலராக உள்ளவர் பாலசந்திரன். இவர் தனது உதவியாளருடன் மதுக்கரை ராணுவ முகாம் எதிரே ரோந்து சென்றனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது. உடனே அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.


    அங்கு மனித எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து மதுக்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து எலும்பு கூடை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.


    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு இங்கு கிடந்த எலும்பு கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எங்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 4 பேர் காரில் வந்தனர். போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தேவாலா டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    கேரள மாநிலம் வைத்திரி பகுதியில் சுற்றுலா விடுதி நடத்தி வரும் ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.

    அதனை கடந்த வாரம் கோழிக்கோடு பகுதிக்கு எடுத்துச் சென்றபோது நண்பர்கள் 4 பேரிடம் கொடுத்துள்ளார். மீண்டும் அவரிடம் வழங்க கோழிக்கோட்டில் இருந்து தமிழக எல்லையான சுல்தான்பத்தேரி, எருமாடு வழியாக இவர்கள் வைத்திரி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை எச்சரித்த போலீசார் பின்னர் கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பினர்.

    • 5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
    • ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

    கோவை

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்( வயது 72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர் (54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்ததார்.

    இந்நிலையில், ராமச்சந்திரன் ரூ. 100 கோடி மதிப்பிலான தனது ஆஸ்பத்திரிையை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேரையும் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 5 பேரிடமும் தனித்தனியாக விடிய, விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது. 

    துடியலூரில் பஸ் நிலையத்தில் தலையில் கல்லைபோட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கட்டிடத்தொழிலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூரில் புதிய பஸ் நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் மின்விசிறி, மின் விளக்கு உள்ளது. இங்கு வீடு இல்லாதோர்படுத்து தூங்குவது வழக்கம்.

    இதே பகுதியை சேர்ந்த ருக்மணி (வயது 42). இந்த பஸ் நிலையத்தில் படுத்து தூங்கி வந்தார். ருக்மணி வீட்டு வேலை மற்றும் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார்.

    இந்நிலையில் அதே பஸ் நிலையத்தில் தினம் படுத்து தூங்கிய கட்டிடத்தொழிலாளி சின்னசாமி (60) என்பவருக்கும், ருக்மணிக்கும் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை எழுந்த சிலர் ருக்மணியை பார்த்தபோது அவர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் ஒரு கல் கிடந்தது. அதிலும் ரத்தக்கறை இருந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ருக்மணியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டதாக அலறி சத்தம்போட்டனர்.

    இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ருக்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் கட்டிடத்தொழிலாளி சின்னசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறும்போது ருக்மணிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டிருக்கலாம். அப்போது ரத்த வாந்தி ஏற்பட்டு ரத்தம் அந்த பகுதி முழுவதும் பரவியிருக்கலாம். அதில் அருகில் இருந்த கல்லிலும் பட்டிருக்கலாம். இதனால் கொலை போன்று பொதுமக்கள் சந்தேகப்பட்டனர்.

    ருக்மணியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து முழுமையாக கூறு முடியும் என்றனர்.

    பஸ் நிலையத்தில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக பரவிய தகவல் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×