என் மலர்

  நீங்கள் தேடியது "private hospital"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணகிரியில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரி நகர் தர்மராஜா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கவிபாரதி (வயது19). இவர் கிருஷ்ணகிரி பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். 

  கடந்த 24-ந்தேதிஅன்று கவிபாரதி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல் என்பவர் கவிபாரதியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் வாக்குவாதம் முற்றி கவிபாரதியை சரமாரியாக சக்திவேல்  தாக்கினார். 

  இது குறித்து கவிபாரதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கியதாக சக்திவேலை கைது செய்தனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஞ்சீபுரத்தில் நகைக்கடை அதிபரிடம் நூதன முறையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  காஞ்சீபுரம்:

  காஞ்சீபுரம் செங்கழு நீரோடை வீதி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால் பா.ஜ.க. கட்சி பிரமுகரான இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகின்றார்.

  நேற்று இவர் கடைக்கு ஒரு போன் வந்தது. மோகன்லாலின் மகன் தினேஷ்குமார் போனை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசியவர், ‘‘காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து டாக்டர் பேசுகிறேன். எனக்கு அவசரமாக 3 சவரனில் 5 தங்க சங்கிலிகள் தேவைப்படுகிறது. அவசரமாக ஆபரே‌ஷன் செய்ய ஆபரே‌ஷன் தியேட்டருக்கு செல்லவிருப்பதால் நகைகளை எடுத்து வந்து கொடுத்து விட்டு பணம் வாங்கிச் செல்லுங்கள்’’ என்று கூறினார்.

  இதை நம்பிய தினேஷ் குமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக் கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியின் வரவேற்பரை பகுதியில் நின்றிருந்த ஒருவர், ‘‘ஏன் தாமதமாக வருகிறீர்கள் டாக்டர் இவ்வளவு நேரம் காத்திருந்து இப்போதுதான் ஆபரே‌ஷன் தியேட்டரில் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். நகைகளை என்னை வாங்கி வரச் சொன்னார். பணத்தை என்னிடமே கொடுப்பார். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்’’ என்று கூறினர்.

  இதை நம்பிய தினேஷ்குமார் நகைகளை அவரிடம் கொடுத்தார். நகைகளை வாங்கிய அவர் நைசாக நழுவி வெளியே சென்று விட்டார்.

  நீண்ட நேரம் காத்திருந்த தினேஷ்குமார் ஆஸ்பத்திரியில் விசாரித்த போது எந்த டாக்டரும் நகைக்கடைக்கு போன் செய்யவில்லை என்பது தெரிய வந்தது. அதிர்ச்சிடைந்த அவர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை கொடுத்து ஏமாந்தது தெரிய வந்தது.

  இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினியிடம் புகார் செய்தார். ஆஸ்பத்தரி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்த போது சந்தேகப்படும்படியான ஒருவர் இருப்பதை கண்டறிந்தனர்.

  ஆனால் நபரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, அக்கம்பக்க பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

  முதற்கட்ட விசாரணையில் நகைகளை கொள்ளையடித்தவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டெலிபோன் பூத்திலிருந்து பேசியது தெரிய வந்துள்ளது. டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நூதன நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

  நூதன முறையில் நகைக்கொள்ளை நடந்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருத்தாசலத்தில் தனியார் மருத்துவமனையின் பின்புறம் கழிவுநீர் கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
  விருத்தாசலம்:

  விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பின்புறம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் நேற்று காலையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் அந்த குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  அந்த குழந்தையை கால்வாயில் விட்டுச்சென்றவர் யார்? கள்ளத்தொடர்பில் பிறந்ததால் குழந்தையை விட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதற்கிடையே இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட குழந்தைகள் மைய ஆலோசகர் பார்த்திபராஜ், விருத்தாசலம் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, ஊர்நல அலுவலர் பானுமதி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை மீட்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலங்குளம் அருகே கல்லூரியில் சான்றிதழ் வாங்க சென்ற தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  ஆலங்குளம்:

  ஆலங்குளம் அருகே உள்ள அகரத்தை சேர்ந்தவர் உலகு. இவரது மகள் முத்துலட்சுமி (வயது23). இவர் கோவையில் தனியார் கண் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் கல்லூரியில் சான்றிதழ் வாங்க போவதாக கூறி சென்றார். 

  அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து முத்துலட்சுமி எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #SwineFlu
  நாகர்கோவில்:

  குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நோய் பாதித்தவர்கள் கண்டிறியப்பட்டு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து காய்ச்சல், இருமல், வாந்தி இருந்தால் அவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெறவும் அறிவுறுத்தி வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி ஆவதை தடுக்க வீடுகளில் சென்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி ஆவதை கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு நகராட்சி அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

  குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்கள் 2 பேரும், பெண்கள் 9 பேரும், சிறுவர்கள் 6 பேர் உள்பட 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  தனியார் ஆஸ்பத்திரியில் பெரியவர்கள், சிறியவர்கள் என 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள் பன்றி காய்ச்சல் பாதித்தவர்களை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #SwineFlu

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #Swineflu
  பரமக்குடி:

  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள எல்லை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவா (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

  கடந்த சில நாட்களாகவே சிவாவுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.

  நிலைமை மோசமாகவே சிவாவை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிவாவுக்கு தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். #Swineflu
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியதையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
  கோவை:

  கோவை சாய்பாபா காலனி சபாபதிவீதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ரித்விகா என்ற மகளும் உள்ளனர்.

  ரித்விகா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். நேற்று இரவு பெற்றோர் வெளியே செல்ல வேண்டி இருந்ததால் குழந்தைகளை வீட்டில் வைத்து விட்டு கதவை பூட்டிச் சென்றனர்.

  இவர்களது வீட்டில் ‘நீமோ மேத்யூ’ வகை நாய் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்தது. நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்ததால் ரித்விகாவின் அண்ணன் கூண்டை திறந்து விட்டான். வெளியே பாய்ந்து வந்த நாய் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ரித்விகாவை கடித்துக்குதறியது. இதனால் ரித்விகா அலறித் துடித்தாள். 2 குழந்தைகளும் கத்தி கூச்சல் போட்டனர்.

  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். நாயிடம் இருந்து சிறுமியை மீட்ட அவர்கள் பெற்றோருக்கு தகவல் கூறினர். பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து, ரித்விகாவை அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்து குதறியதால் ரத்த வெள்ளத்தில் ரித்விகா மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டாள். இதனால் ரித்விகாவை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே ஊழியர் திடீரென இறந்ததால் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  நெல்லை:

  நெல்லை மாவட்டம் செங்கோட்டை பார்டர் பகுதியை சேர்ந்தவர் முனிபாண்டி(வயது28). இவர் நாகர்கோவிலில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முனிபாண்டி கடந்த 31-ந்தேதி தக்கலை அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

  இதில் அவருக்கு தாடையில் கல் பட்டு பற்கள் சேதமாயின. இதையடுத்து முனிபாண்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரது உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு முனிபாண்டிக்கு நேற்று ஆபரேசன் செய்யப்பட்டது. இந்த நிலையில் முனிபாண்டி உடல்நிலை மோசமானது. அவர் திடீரென இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் முனிபாண்டியின் உறவினர்கள் அவர் சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரியின் முன்பு கூடினர்.

  ஆஸ்பத்திரி மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாலேயே முனிபாண்டி இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காசநோயாளிகள் குறித்து முறையான தகவல் தெரிவிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
  பெரம்பலூர்:

  பெரம்பலூரில், காசநோய் தடுப்புத் திட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தினர், தனியார் மருத்துவ நிர்வாகத்தினர், மருந்தாளுனர் சங்கம், ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

  தமிழகத்தில் காசநோய் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க, காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஆய்வகத்தினர், மருந்தாளுனர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

  பரிசோதனை மூலம் நோயாளிக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு நோயாளிகளை அனுப்பி வைக்கும் தனியார் மருத்துவமனை பரிசோதனை மையம் மற்றும் மருந்தாளுனர் ஆகியோருக்கு அரசு சார்பில் ரூ.500 ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், காசநோயால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு மாதந்தோறும் ரூ.500 உதவி தொகை வழங்குகிறது. அதுமட்டுமல்லாது, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. காசநோயாளிகள் குறித்து முறையான தகவல் தெரிவிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

  இவ்வாறு கலெக்டர் பேசினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோட்டில் மருத்துவக்கழிவுகளை குப்பைத்தொட்டியில் கொட்டிய தனியார் ஆஸ்பத்திரிக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
  ஈரோடு:

  பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

  இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

  அங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.

  ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 
  ×