தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி கைது

நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு டாக்டர் கைகளை சுத்தம் செய்ய சென்றுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.5 லட்சம் திருடிய நோயாளி கைது
Published on

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் ஆன்ட்ரோ ரோமியன்தாஸ் (வயது 41). இவர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மருந்துகள் வாங்கிய வகையில் சில மருந்து நிறுவனங்களுக்கு கொடுப்பதற்காக டாக்டர் ஆன்ட்ரோ தனது அறையில் உள்ள பையில் ரூ.5 லட்சம் வைத்திருந்தார்.

அப்போது நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து விட்டு டாக்டர் கைகளை சுத்தம் செய்ய சென்றுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் டாக்டரின் அறையில் இருந்த ரூ.5 லட்சத்தை லாவகமாக திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதற்கிடையே மாலையில் டாக்டர் தனது பையை பரிசோதனை செய்தபோது அதில் வைத்திருந்த பணம் திருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அடிப்படையில் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு பணம் திருடிய நபர் தேடி வந்தனர். இதில் அவர் கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த ஜீவன்லால் (வயது 60) என்பதும், இப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com