என் மலர்
நீங்கள் தேடியது "தற்கொலை"
செங்குன்றம்:
மப்பேடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 63). மறைமலை நகரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் கஜேந்திரன் புழல் சிறையில் இருந்தார்.
இந்நிலையில் கழிவறைக்கு சென்ற கஜேந்திரன் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சிறிது நேரம் கழித்து மற்ற கைதிகள் சென்ற போது கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் கஜேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மன அழுத்தத்தில் கஜேந்திரன் தற்கொலை செய்தாரா? அல்லது மற்ற கைதிகளுடன் மோதல் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவாசல் பாலோபந்தவனம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 64). சம்பவத்தன்று இவர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்பசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தீராத வயிற்று வலி காரணமாக சாம்பசிவம் தற்கொலை செய்தது தெரியவந்தது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சவுமியாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம்.
- மனம் தவழ்ந்த புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் .
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஒறையூர் பலாப் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திரு ஞானம் .விவசாயி. இவரது மனைவி சவுமியா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 2மகன்கள்உள்ளனர்.சவுமியாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த சவுமியா வீட்டில் யாரும் இல்லாத போது புடவை துணியால் தூக்கு போட்டுக் கொண்டார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மனம் தவழ்ந்த புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் . அங்கு இவரை பரிசோதித்த டாக்டர் , சவுமியா இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சவுமியா உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துஇது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தாத்தாவும் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.
- பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கோவிலூர் தெருவை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 50). பைக் மெக்கானிக்.
இவரது மகள் ஹாசினி (15). இவர் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஹாசினி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
பேத்தியின் தற்கொலையால் தாத்தா சுப்பிரமணியன் (75 ) சோகத்துடன் காணப்பட்டார். பேத்தியின் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரை விட்டார்.
பேத்தியும் தாத்தாவும் ஒரே நாளில் இறந்ததால் அந்த பகுதி மக்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.
- திருமணம் ஆகாத ஏக்கத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி, மதி நகர், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் வினோத் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த வினோத் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மது போதையில் இருந்த வினோத் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினோத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் கூடல் புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் தலைமை அதி காரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் தனக்கு பணிச்சுமை அதிக மாக இருப்பதாகவும், தற் கொலை செய்து கொள்ள லாம் என தோன்றுவதாகவும் நெருக்கமாகவர்களிடம் கடந்த சில நாட்களாக புலம்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் மனைவி, குழந்தைகளுடன் அவரது அக்கா வீட்டுக்கு சென்று இருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ராஜா சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ராஜாவின் தாய் ஷோபனா கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.
- வைரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் இந்தி ராநகர் பகுதியைச் சேர்ந்த வர் பாஸ்கரன் மகன் வைர முத்து (வயது 25). ராஜபா ளையத்தை தலைமையிட மாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
ஆண்டிராய்டு போனில் அதிக நேரத்தை செலவிட்ட வைரமுத்து முகநூல் கணக்கும் வைத்திருந்தார். அதில் ஏராளமான நண்பர்களையும் கொண்டிருந்தார். இதற்கிடையே ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரமுத்துவுடன் நண்பராக தன்னை இணைத்துக்கொண்டார்.
நட்பை கடந்த உறவு அவர்களிடையே நீடித்தது. அதுவே காலப்போக்கில் காதலாக மாறியது. இருவரும் தங்களது காதலை பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர். எப்படியும் தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.
இதற்கிடையே வைரமுத்துவின் பெற்றோர், தங்களது மகன் திருமண வயத்தை எட்டிவிட்டதால் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர். இதுபற்றி மகனிடமும் தெரிவித்த அவர்கள் அழகான பெண்ணை தேடித்தேடி கடைசியில் ஒருவரை முடிவு செய்தனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.
அப்போதுதான் வைரமுத்து தனது தந்தையிடம், தான் ஈரோட்டை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும், அவரையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்டு தலையில் இடிவிழுந்தது போல் உணர்ந்த வைரமுத்துவின் தந்தை பாஸ்கரன், அது ஒருபோதும் நடக்காது. உனக்காக நாங்கள் ஒரு பெண்ணை பார்த்துவிட்டோம். நிச்சயதார்த்தம் நடத்தப்பட உள்ளது, அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இளம் பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி அவர் காதலனிடம் கூறி புலம்பியுள்ளார். இதையடுத்து மனவிரக்தியில் இருந்த வைரமுத்து பணியிலும் நாட்டமின்றி காணப்பட்டார். தனது காதல் ஈடேறாது என்று எண்ணிய வைரமுத்து தற்கொலை முடிவுக்கு வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் தனி அறையில் தூங்க சென்றார். நள்ளிரவில் திடீரென்று எழுந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மகன் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட வைரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காரை கிராம ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
- பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் தெரணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 52). இவர் காரை கிராம ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் இருந்த போது தனது காதில் பூச்சு கொல்லி மருந்து ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை :
தக்கலை அருகே அழகியமண்டபம் பொந்தன் பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 43), வேன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடைய தந்தை மற்றும் தாயார் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால் மது பழக்கத்துக்கு அடிமையான தினேஷ் கடந்த சில மாதங்களாக தக்கலை அருகே கோழிப் போர்விளை யில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்குள் மதுவில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மாலையில் அருகில் உள்ள நபர்கள் பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி தினேஷ் கிடந்துள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக அவரது சகோதரி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மணப்பாறை; குழந்தை இல்லாததால் கணவர் டார்ச்சர்-இளம்பெண்தற்கொலை
- இந்த தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருச்சி
திருச்சி மணப்பாறை புத்தாநத்தம் என். பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி அஞ்சலை (வயது 27). இந்த தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி முத்துகிருஷ்ணன் மனைவியை மனரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாயார் சரசு புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் அஞ்சலையின் இறப்புக்கு வரதட்சணை கொடுமை ஏதும் உள்ளதா? என்ற கோணத்தில் ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். குழந்தை இல்லாத பிரச்சனையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.