டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை

சென்னிமலை அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த மணிமலைகரடு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (32). இவரது மனைவி சங்கீதா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் செல்லமுத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக செல்லமுத்து மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு செல்லமுத்து திடீரென வீட்டை உள்புறமாக தாழிட்டு வீட்டில் அறையில் தூக்கு போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று செல்லமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செல்லமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் செல்லமுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com