கோஷ்டி மோதல் 8 பேர் கைது

கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர். இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.
கோஷ்டி மோதல் 8 பேர் கைது
Published on

மதுரை

மதுைர பெத்தானி யாபுரம் மேட்டுத்தெரு கம்பர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 41) .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேச்சியம்மாள் கரிமேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், பூமாரி, கனி, செல்வி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர் . சரவணன் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ், பேச்சி, கோகிலா, பிரியா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com